(ஆர்.யசி)

எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்­சியின் பல­மான வேட்­பா­ளரை கள­மி­றக்கி ஐக்­கிய தேசிய கட்­சியின் அர­சாங்­கத்தை தொடர்ந்தும் முன்­னெ­டுப்போம். கட்­சி­க­ளுக்கு இடையில் ஜனா­தி­ப­தியை பங்­கு­போட இனியும் அவ­சியம் இல்லை என்று   அமைச்சர் லக்ஸ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார். 

எதி­ர­ணியின் ராஜபக் ஷ வேட்­பா­ளர்­களில்  எவ­ருக்­கேனும் தமிழ் முஸ்லிம் மக்­களின் ஆத­ரவை பெற முடி­யுமா எனவும்  அவர் கேள்வி எழுப்­பினார். 

அடுத்­த­தாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற ஜனா­தி­பதி தேர்­தலில் பிர­தான இரண்டு கட்­சி­களும் தமக்­கான ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்து அதிக அக்­கறை செலுத்தி வரு­கின்ற நிலையில் அது குறித்தும் தமிழ் முஸ்லிம் மக்­களின் ஆத­ர­வு­களை பெற்­றுக்­கொள்ள முன்­னெ­டுக்கும் நகர்­வுகள்  தொடர்­பா­கவும்  வின­விய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

இது குறித்து அவர் மேலும்  குறிப்­பி­டு­கையில் 

நல்­லாட்சி அர­சாங்கம் எதிர்­பார்த்த அளவு ஆரோக்­கி­ய­மான பயணம் ஒன்­றினை முன்­னெ­டுக்­க­வில்லை என்­பதை எம்மால் மறுக்க முடி­யாது. ஆட்­சியை ஆரம்­பித்த காலங்­களில் மக்­க­ளுக்­காக செய்ய வேண்­டிய பல வேலைத்­திட்­டங்­களை திட்டம் தீட்­டினோம். ஆனால் அவற்றை முழு­மை­யாக முன்­னெ­டுக்க முடி­யாமல் போன­மைக்கு அர­சி­யலில் காலை­வாறும்  கொள்­கை­களே கார­ண­மாகும். குறிப்­பாக ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் ஜனா­தி­பதி அணி­யினர் கொடுத்த வாக்­கு­று­தி­க­ளுக்கு அமைய ஒத்­து­ழைப்­புடன் செயற்­ப­ட­வில்லை. வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்கும் நேரங்­களில் எல்­லாமே அவர்­களின் பின்­வாங்­கலே தடை­யாக இருந்­தது. அது­மட்டும் அல்­லாது கொள்கை ரீதியில் பல முரண்­பா­டுகள் இருந்­தன. இன்று ஜனா­தி­பதி செயற்­படும் விதம் அவர் கூறும் கருத்­துக்கள் அனைத்­தையும் பார்க்­கையில் அனை­வ­ருக்கும் இது தெரிந்­தி­ருக்கும். 

எவ்­வாறு இருப்­பினும் நாம் யாரையும் குறை­கூ­றிக்­கொண்டு இனியும் பல­வீ­ன­மாக இருக்க முடி­யாது. இன்று எந்த கட்­சியை ஆத­ரிப்­பது என்­பது குறித்து மக்­க­ளுக்குள் சந்­தேகம் எழு­கின்­றது. ஆகவே 2020 ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதி தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்­சியின் தனி வேட்­பாளர் ஒரு­வ­ரையே நாம் கள­மி­றக்­குவோம். கட்­சி­க­ளுக்­கி­டையில் ஜனா­தி­ப­தியை  பங்­கு­போட்­டுக்­கொள்ள நாம் இனியும் தயா­ரில்லை.  எமது வேட்­பாளர் யார் என்­பதை வெகு விரைவில் வெளிப்­ப­டுத்­துவோம் . இன்று ஐக்­கிய தேசிய கட்­சியின்  உறுப்­பி­னர்­க­ளி­டையே   சில கருத்­துக்கள் உள்­ளன. 

அதற்கு கட்­சியின் உயர் மட்ட உறுப்­பி­னர்கள் நிச்­ச­ய­மாக செவி சாய்ப்­பார்கள். கட்­சிக்குள் மாற்­றுக்­க­ருத்­துக்கள் இருக்­கின்­றன ஆனால் எந்த ஒரு சந்­தர்ப்­பத்­திலும் முரண்­பா­டுகள் நில­வ­வில்லை. கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளான சஜித் பிரே­ம­தா­சவை அதி­க­மா­ன­வர்கள் பரிந்­து­ரைத்தால் ஐக்­கிய தேசிய கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள்  அதற்கு இணைக்கம் தெரி­வித்தால் அவரை கள­மி­றக்­கலாம். அல்­லது வேறு ஒரு­வரை கள­மி­றக்க நினைத்தால் அதற்­கான மக்கள் ஆத­ரவு இருந்தால் அதற்­கான நட­வ­டிக்­கையை எடுக்க முடியும். எதற்கும் ஐக்­கிய தேசிய கட்சி தயா­ரா­கவே உள்­ளது. எவ்­வாறு இருப்­பினும் 2020 ஆம் ஆண்டு தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை கள­மி­றக்கி வெற்­றி­யுடன் ஐக்­கிய தேசிய கட்­சியின் அர­சாங்­கத்தை தொடர்ந்து முன்­னெ­டுப்போம். 

இன்று ராஜபக் ஷக்­களில் எவர் ஜனா­தி­பதி வேட்­பாளர் என்­பதில் அவர்­களின் கூட்­ட­ணிக்குள் பல குழப்­பங்கள் நில­வு­கின்­றன. எனினும் அவர்கள் இந்த நாட்டில் பல்­லின சமூக கொள்­கையை மறந்து தனி சிங்­கள கொள்கை என்ற நோக்­கத்தில் பய­ணிக்­கவே முயற்­சிக்­கின்­றனர். இந்த நாட்டில் தமிழ் முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் மிகவும் முக்கியமானவையாகும். அதனை தக்கவைக்க வேண்டிய கட்டாயம் ஆட்சியமைக்கும் எந்த அரசாங்கமாக இருந்தாலும் அவர்களுக்கு உள்ளது. ராஜபக் ஷவினரால் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்றும்கொள்ள முடியுமா என்ற கேள்வியை நாம் அவர்களிடம் கேட்கிறோம். இந்த அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்காக செய்த சேவைகளை வேறு எவரும் செய்யவில்லை  என்றார்.