(எம்.மனோசித்ரா)

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே குறித்த இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து மீன்பிடிப்படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்கள் 18 - 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

குறித்த இந்திய மீனவர்கள் ஏழு பேரும் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதன் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடல்வள பாதுகாப்பு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.