மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் வேளாண்மை அறுவடை முடிந்ததும் வயலுக்கு தீவைத்து எரிப்பதலால் இந்த வரட்சி காலத்தில் விவசாயிகளின் இந்த செயலினால்  கால்நடைகளின் தீனியான புல்லை  மேயமுடியாமல் நடைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை வளர்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

Related image

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் வரட்சி நிலவி வருவதனால் குளங்களில் நீர் இல்லாமல் வறண்டு  போயுள்ள நிலையில்  கால்நடைகள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி அவதிப்பட்டுவருகின்றது 

இந்த நிலையில் வவுணதீவு  பிரதேசத்திலுள்ள  ஒலிமடு ,ஆயித்தியமலை பிரதேசங்களில் உள்ள வயல்களில் சிறுபோக வேளாண்மை அறுவடை முடிந்து ஒரு கிழமைக்குள் அந்த வயல்களுக்கு விவசாயிகள்  தீயிட்டு வருவதனால் கால்நடைகனுக்கான தீனியான புல்லை கூட கால்நடைகள் மேயமுடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது 

அடுத்து பெரும்போக வேளாண்மை செய்வதற்கு இன்னும் 3 மாதம் இருக்கும் வேளையில் கால்நடைகளின் உணவான புல்லை பெற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு இந்த விவசாயிகளின் செயற்பாடானது கண்டிக்கப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இந்த வயல்களுக்கு தீயிட்டு எரிக்க கூடாது என கமநல திணைக்களம் சூழல் சுற்றாடல் திணைக்களம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தி வருகின்ற போதும் விவசாயிகள் இவ்வாறு செய்வதை உடன் சம்மந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்நடைகளை காப்பாற்ற முன்வரவேண்டும் என கால்நடை வளர்ப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.