சட்­ட­சபை தேர்­தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றால் ரஜி­னிகாந்த் நடித்து வெளி­யாக உள்ள கபாலி திரைப்­ப­டத்தை ரசி­கர்­களும் பொது­மக்­களும் இல­வ­ச­மாக பார்க்க ஏற்­பாடு செய்வோம் என்று நெல்லை மாவட்ட ரஜி­னிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் அறி­வித்­துள்ளார். திரு­நெல்­வேலி மாந­கர மாவட்ட தலைமை ரஜி­னிகாந்த் ரசிகர் நற்­பணி மன்ற தலை­வ­ராக இருப்­பவர் தள­பதி முருகன். திரு­நெல்­வேலி சந்­திப்பு, சிந்­து­பூந்­து­றையைச் சேர்ந்த இவர், நடை­பெ­ற­வுள்ள சட்­ட­சபைத் தேர்­தலில் திரு­நெல்­வேலி தொகு­தியில் போட்­டி­யிட வேட்­பு­மனு தாக்கல் செய்தார். ஆனால், இவ­ரது வேட்­பு­மனு நிரா­க­ரிக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து, அவர் அ.தி.மு.க. வேட்­பாளர் நயினார் நாகேந்­தி­ரனை சந்­தித்து, அவ­ருக்கு ஆத­ரவு தெரி­வித்தார்.

இது குறித்து செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய தள­பதி முருகன், சட்­ட­சபை தேர்­தலில் நடிகர் ரஜி­னிகாந்த் எந்த கட்­சிக்கும் ஆத­ரவு தெரி­விக்­க­வில்லை. ரசி­கர்கள் அனை­வரும் அவ­ரவர் விருப்­பப்­படி முடிவு செய்து கொள்­ளலாம் என கூறி­யுள்ளார். எனவே, நான் திரு­நெல்­வேலி தொகு­தியில் போட்­டி­யிட முடிவு செய்தேன். ஆனால், உறு­தி­மொழி ஆவ­ணப்­பத்­திரம் தாக்கல் செய்­யா­ததால் மனு நிரா­க­ரிக்­கப்­பட்டு விட்­டது. எனவே, இந்த தொகு­தியில் வேட்­பா­ளர்­களில் நல்­ல­வரை தேர்ந்­தெ­டுத்து, அவ­ருக்கு ஆத­ர­வாக பிர­சாரம் செய்ய திரு­நெல்­வேலி மாவட்ட ரஜினி மன்றம் முடிவு செய்­துள்­ளது. இங்கு அனை­வ­ராலும் எளிதில் அணு­கக்­கூ­டிய நப­ராக உள்ள அ.தி.மு.க வேட்­பாளர் நயினார் நாகேந்­தி­ர­னுக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்ளோம்.

திரு­நெல்­வேலி மாந­க­ரத்தில் உள்ள 50 ஆயிரம் ரசி­கர்கள் அவ­ருக்கு ஆத­ர­வாக பிர­சாரம் செய்து, வெற்றி பெறச் செய்­வார்கள். மேலும், இந்த தேர்­தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றால் நடிகர் ரஜி­னிகாந்த் நடித்து விரைவில் வெளி­வர உள்ள கபாலி

திரைப்­ப­டத்தின் முதல்காட்சி திரு­நெல்­வேலி திரையரங்கில் ரசிகர்களுக்கு இலவசமாக காண்பிக்கப்படும். அடுத்த காட்சி பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக காண்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.