225 உறுப்பினர்களுக்கு மாத்திரம் செலவு செய்வதில்லை என்பதை சபாநாயகர் தெளிவுபடுத்த வேண்டும்  ; சீ.பீ.ரத்நாயக்க 

Published By: Digital Desk 4

29 Jul, 2019 | 10:51 AM
image

இலங்கை பாராளுமன்றத்தில் உணவு மற்றும் தேனீர் போன்ற செலவுகளுக்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற 225 உறுப்பினர்களுக்கு மாத்திரம் செலவு செய்வதில்லை என்பதை சபாநாயகர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.பீ. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Image result for சீ.பி. ரத்நாயக்க

கினிகத்தேனை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 

பாராளுமன்றத்தில் அங்கம் வைக்கின்ற 225 உறுப்பினர்களும், இந்த முறைபாட்டினை தெரிவிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் உத்தியோகத்தர்கள் உள்ளனர். அதேபோல் பொலிஸார் இருக்கின்றனர். பாராளுமன்ற அமர்வு இடம்பெருகின்ற போது ஊடகவியலாளர்கள் வருவார்கள். எனவே இவர்கள் அனைவரையும் கனக்கெடுப்பு செய்தால் 1500க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு மற்றும் தேனீர் என்பன வழங்கபட வேண்டிய தேவை இருக்கிறது.

இவர்களுக்கு காலை மதியம் இரவு நேரத்திற்கான உணவும் தேனீரும் வழங்கபடுகிறது. இதற்கான அனைத்து செலவுகளையும் பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு மாத்திரம் அல்ல செலவு செய்யப்படுகிறது, ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் சேர்த்தே செலவு செய்யபடுவதாக அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் 1500 உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். எனவே இதற்கான செலவினை பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது சுமத்துவது பிழையான விடயம், சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் இவ்வாறு தான் செலவு செய்யபடுகிறது என்ற விடயத்தினை இந்த நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும். 

பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாதத்தில் பத்து நாட்கள் மாத்திரமே இருப்பார்கள். இவ்வாறு வீண்விரயம் செய்யபடுவதாக கூறினால் நாங்கள் சுகபோக வாழ்க்கை வாழ்வதாக மக்கள் நினைப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28