எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் வரை தான்  தொடர்ந்தும் விளையாட எதிர்பார்த்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சகலதுறை ஆட்டக்காரருமான அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

32 வயதாகும் மெத்தியூஸ் இதுவரை 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5,554 ஓட்டங்களையும் 33 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார். 

அத்துடன் 212 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,673 ஓட்டங்களையும் 115 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.