ரஷ்யாவில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை நகர சபை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1,400 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வெளிப்படையான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சியினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அனுமதி பெறாமல் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 1,400 பேரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாவர்கள்.

எதிர்வரும், செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 45 இடங்களைக் கொண்ட மாஸ்கோ நகர சபைக்கான தேர்தலில் பங்கேற்க முடியாத வகையில், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.