மதவாச்சி - அநுராதபுரம் வீதியின் வஹமலுகெல்லேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலியானதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் பஸ் ஒன்றும் லொறியொன்றுமே மோதியே மேற்படி விபத்து நேற்றிரவு 11:50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் நல்லூரைச் சேர்ந்த 12,30,53 வயதுடையவர்கள் ஆவர்.