வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 45 அடி உய­ரம் கொண்டு சித்திரத் தேர் வெள்ளோட்டம் சிறப்புற இடம்பெற்றது. 

2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்த மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா நடைபெற்றுவருகிறது. நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை தேர்தத் திருவிழா இடம்பெறவுள்ளது. 

அதி சிறப்­பும் மிகப் பெரி­ய­து­மான பஞ்­ச­ர­தங்­க­ளின் நடு­நா­ய­க­மாக விளங்­கும் சண்­மு­கப் பெரு­மா­னின் முக உத்­தர திருத்­தேர் 1990ஆம் ஆண்­டு­க­ளில் நடை­பெற்ற உள்­நாட்­டுப் போரில் ஏனைய நான்கு தேர்­கள், சப்­ப­ரம், திரு­மஞ்­சம், கைலா­ய­வா­க­னம் என்­ப­வற்­று­டன் முற்­று­மு­ழு­தாக அழிவடைந்தது.

இப்­பொ­ழுது முன்­பி­ருந்த முக ­உத்­தர தேரைவிட இன்­னும் பெரி­தா­க­வும் 45 அடி உய­ரம் கொண்டு மேலும் சிறப்­பான சிற்­பங்­க­ளை­யும் கொண்­ட­தாக தேர் இந்த ஆண்டு அமைத்து முடிக்கப்பட்டது.

இந்தச் சிறப்பு வாய்ந்த மாபெ­ரும் முக உத்­தர தேர் இன்று ஞாயிற்­றுக்­கி­ழ­மை­ வெள்­ளோட்டம் நடைபெற்றது.

பல நூற்றுக்கணக்கான அடியவர்களின் பிராத்தனைகளுடன் தேர் வெள்ளோட்டம் இடம்பெற்றது.

படங்கள் ஐ.சிவசாந்தன்