(எஸ்,ஜே.பிரசாத்)

நடைபெற்று வரும் பங்களாதேக்ஷிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியை காண வந்திருந்த இலங்கை அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரரான அவிக்ஷ்க பெர்னாண்டோவின் தந்தைக்கு தீடீர் சுகயீனம் ஏற்பட்டது.

இதைனயடுத்து உடனடியாக அவசர ஊர்த்தி ஒன்று வரவைழக்கப்பட்டு அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பமாவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் பார்வையாளர்கள் அறையிலிருந்தபோதே அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

எனினும் மைதானத்தில் அபாரமாக ஆடி இலங்கை அணியின் ஓட்ட வேகத்தை உயர்த்திய அவிஸ்க பெர்னாண்டோ இச் சம்பவம் குறித்து அறிந்திருக்கவில்லை.