(செ.தேன்மொழி)

அநுராதபுரத்தில் முச்சக்கர வண்டியுடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று பெண்கள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியொன்றும் கார மோதி விபத்து குறித்த விபத்து இன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது முச்சக்கர வண்டியில் பெண்ணொருவர் உட்பட ஐவர் சென்றுள்ளதுடன், காரில் இரு பெண்கள் உட்பட நால்வர் பயணித்துள்ளனர்.

விபத்தின் பின்னர் காயடைந்த அனைவரும் அநுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் முச்சக்கர வண்டியின் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மாத்தளை - கலேவல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய மகேஷ் விக்கிரமாராச்சி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.