மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்லோ தோட்ட கங்குவத்தை பாடசாலைகளுக்கு செல்லும் பாதை குன்றும் குழியுமாக இருப்பதால் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் பெரும் கஸ்ட்டங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், 

மலையக அரசியல் தலைவர்கள் மலையக பகுதியில் காபட் பாதை திறப்பு விழா மேற்கொண்டு வருகின்றனர் ஆனால் இப்பாதை 200 மீட்டர் தூரம் மட்டும் கொங்ரிட் பாதையாக புனரமைப்பு செய்த போதிலும் மேலும் 2.5 கிலோ மீட்டர் தூரம் குன்றும் குழியுமாக இருப்பதாகவும் இதனால் பாடசாலை மாணவர்கள்,கர்பணிதாய்மார்கள் மற்றும் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுவதாக தெரிவிக்கின்றனர்.

ஆகையால் உடன் மலையக அரசியல் தலைவர்களோ அல்லது பிரதேச சபை உறுப்பினர்களோ கவனத்தி்ல் கொண்டு உடன் தீர்வை வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.