(செ.தேன்மொழி)

பொகவந்தலாவை பகுதியில் அனுமதியின்றி மாணிக்கக்கல் அகழ்வில்  ஈடுப்பட்ட 67 வயதுடைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொகவந்தலாவை  - கொட்டியாகல பகுதியில்  பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது அவரிடமிருந்து மாணிக்கக் கல் அகழ்விற்கு பயன்படுத்திய உபகரணங்களும் மீட்கப்பட்டன.

பொகவந்தலாவை பொலிஸார் சந்தேக நபரை பிணையில் விடுவித்துள்ளதுடன், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.