\வவுனியாவில் 36 ஆவது வெலிக்கடை படுகொலை நாள் நினைவு தினம் இன்று (27) மாலை 4 மணியளவில் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் ஏற்பாட்டில் அனுஸ்டிக்கப்பட்டது.

இந் நிகழ்வு நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் மோகன் தலைமையில் கோவில்குளத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வரன் நூலகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட நினைவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவிக்கபட்டதன் பின்னர் மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட காந்தீயம் அமைப்பின் செயலாளர் வைத்தியர் சோ.ராஜசுந்தரம் மற்றும் ஏனைய இனப்பற்றாரர்களையும் இதன் போது நினைவு கூரப்பட்டிருந்தார்கள்.

இந் நினைவஞ்சலி நிகழ்வில் முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன், முன்னாள் வடக்குமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா நகரசபை உறுப்பினர்கள், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று தவிசாளர் தவராசா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.