இந்தியாவிலுள்ள விமான நிலையங்களில், 25 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் குரு பிரசாத் மொகபத்ரா, ஊடகவியலாளர்களுக்கு இதனை தெரிவித்துள்ளார், “வருடத்துக்கு 10- 15 இலட்சம் பயணிகள் வந்து செல்லும் விமான நிலையங்கள் பராமரிப்பை தனியார்மயமாக்குவது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக 6 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், 2ஆம் கட்டமாக 20 முதல் 25 விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.