(ப. பன்னீர்செல்வம்)

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு அவரிடம் கடந்த ஆட்சியில் சிறப்புரிமைகள் இலஞ்சம் பெற்றுக் கொண்ட ஊடகமொன்றும் அதன் ஊடகவியலாளர்கள் சிலரும் ஜே.வி.பி.க்கு எதிராக பொய் பிரசாரங்களை முன்னெடுத்து கட்சியை அழிப்பதற்கு சதித்திட்டம் போடுகின்றனர் என்று ஜே.வி.பி. யின் முக்கியஸ்தர்களான தலைவர் அநுர குமார திஸாநாயக்க, செயலாளர் ரில்வின் சில்வா, விஜித ஹேரத், லால்காந்த ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.

கண்முன்னே மரணத்தை சந்தித்தும் பயப்படாதவர்கள் நாங்கள். எனவே “சேறு பூசும்” ஊடகங்களுக்கு  அஞ்சமாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் இற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.