தென் கொரியாவின் குவாங்ஜூவில் அமைந்துள்ள இரவு விடுதியில் உள்ள பல்கனி இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தவலை வெளியிட்டுள்ளது. 

இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 17 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் தீயணைப்பு சேவை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் அமெரிக்கா, நியூஸிலாந்து, நெதர்லாந்து, இத்தாலி மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நீச்சல் வீரர்களும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். .

குறித்த விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.