திருமண வீடு ஒன்றில் நால்வருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கை கலப்பாக மாறியதில்நபர் ஒருவர் மற்றுமொரு நபரை தடியால் தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் மொணராகல, கடோல்பெத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

திருமண வீடு ஒன்றில் நால்வருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின் கை கலப்பில் நிறைவடைந்தது. அதன் போது நபர் ஒருவர் மற்றுமொரு நபரை தடியால் தாக்கியதிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் மொணராகல, கடோல்பெத்த பகுதியை சேர்ந்த 42 வயதுடையவர் என இனங்காணப்பட்டுள்ளார். 

இந்நிலையில் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகிய நிலையில் பொலிஸாரால் குறித்த கைது செய்யப்பட்டுள்ளார். 

இதையடுத்து குறித்த கொலை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.