முரண்பாடுகள் வேண்டாம் இணைந்து செயற்படுங்கள்

Published By: Priyatharshan

27 Jul, 2019 | 01:55 PM
image

முழு உல­குக்கும் பேர­திர்ச்­சியைக் கொடுத்த  உயிர்த்த ஞாயிறு குண்­டுத் ­தாக்­கு­தல்கள் இடம்­பெற்று கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யுடன் மூன்று மாதங்கள் நிறை­வ­டைந்­து­விட்­டன. மூன்று மாத நிறைவில் இது தொடர்பில், பல்­வேறு விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அதன் விளை­வுகள்  பல்­வேறு மட்­டங்கள் வரை  தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி உள்­ள­மையைக் காண ­மு­டி­கின்­றது. 

மூன்று மாதங்கள்  நிறை­வ­டைந்­துள்ள சூழலில் பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்­டகை தெரி­வித்­துள்ள  விமர்­ச­னங்கள் அதற்கு அரச தலை­மைத்­துவம் வழங்­கி­யுள்ள  பதி­லடி போன்ற விட­யங்கள் பெரும் பேசுபொரு­ளாக மாறி­யுள்­ளன.  அந்­த­வ­கையில் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் ஏற்­ப­டுத்­திய தாக்­கங்­களும் விளை­வு­களும் இன்னும் மக்கள் மத்­தியில் பாரிய செல்­வாக்கு செலுத்­து­கின்­றன என்­பதே யதார்த்­த­ம். 

 உயி­ரி­ழப்­பு­க­ளையும் அச்­சத்­தையும் ஏற்­ப­டுத்­திய குண்­டுத்­தாக்­குதல் நடை­பெற்று மூன்று மாதங்கள் நிறை­வ­டைந்­துள்­ளன. கடி­ன­மா­ன­தொரு காலப்­ப­கு­தியை நாம் கடந்­து­ வந்­தி­ருக்­கின்றோம் என்­பதே சரி­யானது. 250க்கும் மேற்­பட்ட உயி­ரி­ழப்­புகள், 400க்கும் மேற்­பட்டோர் காய­ம­டைந்த  பதி­வுகள்  உட்­பட பாரி­ய­ தொரு அழிவை இந்தக் குண்­டுத்­தாக்­கு­தல்­களில் நாடு சந்­தித்­தது.  அது­மட்­டு­மன்றி நாட்டின் வர்த்­த­கத்­துறை, பொரு­ளா­தா­ரத்­துறை, சுற்­று­லாத்­துறை என்­பன பாரிய வீழ்ச்­சியை நோக்கிப் பய­ணித்­தன.  நாட்டின் பொரு­ளா­தாரம் கடும்  பாதக விளை­வு­களைச் சந்­தித்­தது.  தாக்­கு­தல்­களின் பின்னர்  நாட்டில் என்ன நடந்­தது என்­பதை சுதா­க­ரித்­துக்­கொள்­ளவே மக்­க­ளுக்கு ஒரு கால இடை­வெளி தேவைப்­பட்­டது. மக்கள் மத்­தி­யி­லான இந்த அச்­சமும் பயமும் இது­வரை முழு­மை­யாக நீங்­கி­ வி­ட­வில்லை என்­பதே உண்­மை­. மக்கள் அதிர்ச்­சி­யி­லி­ருந்து மீண்டு வந்­து ­கொண்­டி­ருக்­கின்­ற­ போ­திலும் குண்டு வெடிப்புச் சம்­ப­வங்கள் ஏற்­ப­டுத்­திய தாக்கத்தை மக்கள் இன்னும் மறக்­க­வில்லை. தற்­போது பொரு­ளா­தாரம், சுற்­று­லாத்­துறை, மக்­களின் அன்­றாட செயற்­பா­டுகள் என்­பன வழமை நிலைக்குத் திரும்பி வரு­கின்­றன. 

எனினும் குண்­டுத் ­தாக்­கு­தல்கள் ஏற்­ப­டுத்­திய அதிர்ச்சி நிலை இன்னும் முழு­மை­யாக மாற­வில்லை. இந்த நாட்­டுக்கு ஏப்ரல் 21ஆம் திகதி என்­பது ஓர் இருள்சூழ்ந்த  நாளா­கவே இருக்­கி­றது. கிறிஸ்­தவ மக்கள் மிகவும் உற்­சா­கத்­துடன் உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று ஆரா­த­னை­களில் பங்­கேற்­றனர். ஆனால் இப்­ப­டி­யொரு நிலைமை ஏற்­படும் என ஒரு­போதும் எவரும் எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை. உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று காலை ஆரா­த­னையில் மக்கள் பங்­கேற்­றி­ருந்­த­போது இந்தக் குண்­டு வெடிப்புச் சம்­ப­வங்கள் திடீ­ரென இடம்­பெற்­றன. கொழும்பு, மட்­டக்­க­ளப்பு மற்றும் கட்­டு­வாப்­பிட்­டிய ஆகிய பிர­தே­ச ஆல­யங்­களில்  குண்டுவெடிப்பு சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன. அதே­போன்று சுற்­று­லாப்­ப­ய­ணிகள் அதி­க­ எண்ணிக்கையில்  தங்­கி­யி­ருந்த சி­ன­மன்­கிராண்ட், ஷங்­கி­ரில்லா, கிங்ஸ்­பரி ஆகிய நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளிலும் குண்டுவெடிப்புச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன. 

மேலும் தெமட்­ட­கொட, தெஹி­வ­ளைப்­ப­கு­தி­க­ளிலும் இடம்­பெற்ற சம்­ப­வங்­க­ளுடன் மொத்­த­மாக எட்டு இடங்­களில் குண்­டு­வெ­டிப்புச் சம்­ப­வங்கள் பதி­வா­கின. இந்தச் சம்­ப­வங்­களை அடுத்து உல­கமே அதிர்ச்­சி­யுடன் இலங்­கையை திரும்பிப் பார்த்­தது. என்ன நடக்­கின்­றது என்று மக்கள் அதிர்ச்சி அடைந்­தனர். இந்த நாடு ஏற்­க­னவே முப்­பது வருட யுத்­தத்தை எதிர்­கொண்டு வடுக்­க­ளையும் வலி­க­ளையும் தாங்கிக் ­கொண்­டி­ருந்­தது. எனவே  இவ்­வா­றான சம்­ப­வங்­களின் வலி எவ்­வா­றா­னது என்­பது மக்­க­ளுக்குத் தெரியும். எனினும் 2009ஆம் ஆண்­டி­லி­ருந்து 2019ஆம் ஆண்டு வரை இந்த நாட்டில் ஆயுதப் போர் இடம்­பெ­ற­வில்லை. இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு நிரந்­தரத் தீர்வு கிடைக்­கா­வி­டினும் கூட கடந்த பத்து வரு­டங்­க­ளாக மக்கள் அமை­திக்­காற்றை சுவா­சித்­துக் ­கொண்­டி­ருந்­தனர். இவ்­வாறு பத்து வரு­டங்கள் அமை­திக்­காற்றை சுவா­சித்து வந்த மக்­க­ளுக்கு ஏப்ரல் 21ஆம் திகதி தாக்­குதல் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது. 

அந்தத் தாக்­கு­த­லுடன் மக்கள் மத்­தியில் ஒரு­வ­கை­யான அச்சம் குடி­கொண்­டது. மக்கள் வீதிக்கு இறங்­கவே பயந்தனர். பிள்­ளை­களைப் பாட­சா­லை­க்கு அனுப்­பவே தயங்­கினர். ஆனால் பாது­காப்புத் தரப்­பினர் உட­ன­டி­யாக செயற்­பட்டு நாட்டில் மீண்டும் சகஜநிலையை உறு­திப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டனர். அதி­ரடிக் கைதுகள் இடம்­பெற்­றன. பயங்­க­ர­வா­திகள் தங்­கி­யி­ருந்த இடம் முற்­றுகையிடப்­பட்­டது. அப்­போது பயங்­க­ர­வா­திகள் தம்­மை­த்தாமே குண்­டு ­வைத்து அழித்­துக் ­கொண்­டனர். அவ­ச­ர­ கால சட்­டமும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் பாது­காப்புத் தரப்­பினர்   சரி­யான முறையில் செயற்­பட்டு நாட்டின் அன்­றாட நிலையை சீர்பட்வழ­மைக்குக் கொண்­டு­ வந்­தனர். மக்கள் மத்­தி­யிலும் நம்­பிக்கை துளிர்­விட ஆரம்­பித்­தது. 

குண்டு வெடிப்புச் சம்­ப­வத்தின் பின்னர் பல்­வேறு கோணங்­களில் விசா­ர­ணை­களும் ஆரம்­பிக்­கப்­பட்­டன. பாது­காப்புத் தரப்­பினர் விசா­ர­ணை­களை நடத்தி வரு­கின்­றனர். ஜனா­தி­பதி நிய­மித்த குழு­ விசா­ரணை அறிக்கையை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளித்தது. அதே­போன்று பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு நிய­மிக்­கப்­பட்டு அதன் விசா­ர­ணைகள் நடை­பெற்று வரு­கின்­றன. எனினும் குண்­டுத் ­தாக்­குதல் நடை­பெற்று 20 தினங்­க­ளுக்குப் பின்னர் வடமேல் மற்றும் மேல் ­மா­காணத்தின் சில இடங்­களில் முஸ்லிம் சமூ­கத்­தினர் மீது தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன. அதில் பலத்த சேதங்கள் ஏற்­பட்­டன. அதன்­பின்னர் ஒரு சில முஸ்லிம் அர­சி­யல்­வா­தி கள் மீதான குற்­றச்­சாட்டு­களும் வலு­வ­டைந்­தன.  ஒரு­ கட்­டத்தில் முஸ்லிம் பிர­தி­நி­திகள் அனை­வரும் கூட்­டாகத் தமது பத­வி­களை  ரா­ஜி­னாமா செய்­தனர். அதே­போன்று அர­சாங்­கத்­துக்கு எதி­ராக ஜே.வி.பி.யினர் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணையைக் கொண்­டு ­வந்த நிலையில் அந்தப் பிரே­ரணை வாக்­கெ­டுப்புக்கு விடப்­பட்டு தோற்­க­டிக்­கப்­பட்­டது. இவ்­வா­றான கரடுமுர­டான மற்றும் கடி­ன­மான பய­ணத்தின் மத்­தி­யி­லேயே இந்த மூன்று மாதங்கள் நிறை­வ­டைந்­தி­ருக்­கின்­றன. இதில் பல்­வேறு விமர்­ச­னங்கள் பல தரப்­பி­ன­ராலும் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. விசே­ட­மாக இந்தத் தாக்­குதல் தொடர்பில் ஏற்­க­னவே முன்­னெச்­ச­ரிக்கை விடுக்கப்­பட்டும் சரி­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்­டுகள் கடு­மை­யாக முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக உயர் அதி­கா­ரி­களின் அச­மந்தப் போக்கு கார­ண­மா­கவே இந்த நிலைமை ஏற்­பட்­ட­தாக கடும் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டன. 

வெளிவந்த விடயங்கள்

பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு விசா­ர­ணையின் போது பல­ வி­ட­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வந்­தன. இவ்­வாறு கடி­ன­மான மூன்­று மாத பய­ணத்தின் பின்னர் தற்­போது கொழும்பு பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்­டகை கடும் விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருக்­கின்றார். கட்­டு­வாப்­பிட்­டி­யவில் குண்டு வெடிப்­பினால் அழி­வ­டைந்த ஆலயம் மீள் புன­ர­மைப்பு செய்­யப்­பட்டு திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய கர்­தினால் ஆண்டகை பல விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருக்­கின்றார். 

"உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர் பில் ஆராய்­வ­தற்குச் சுயா­தீ­ன­மான உறுப்­பி­னர்­களைக் கொண்ட ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­பட வேண்டும். ஏனெனில் இதற்கு முன்னர் நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழுக்­களின் மீதோ அவை முன்­னெ­டுக்கும் விசா­ர­ணைகள் மீதோ எவ்­வித நம்­பிக்­கையும் எமக்கில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்பில் தக­வல்கள் கிடைக்கப் பெற்­றி­ருந்தும் முறை­யான செயற்றிட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்­பது தெரி­கி­றது. சர்­வ­தே­சத்தின் விருப்­புக்­காக எமது நாட்டு அர­சியல் தலை­மைகள் புல­னாய்­வுப் ­பி­ரிவை செயற்­ப­ட­வி­டாமல் தடுத்­த­மையே இதற்­கான பிர­தான கார ­ண­ம்.   நாம் ஐரோப்பா மற்றும் அமெ­ரிக்கா போன்ற நாடு­க­ளுக்கு ஏற்றாற்போல வாழ வேண்­டி­ய­தில்லை. அந்த நாட்டுத் தலை­வர்­க­ளுக்கு ஏற்றாற்போல எமது நாட்டை ஆட்சி செய்­யவும் இட­ம­ளிக்க முடி­யாது. புல­னாய்வுத்துறையைப் பலப்­ப­டுத்த வேண்டும். தாக்­கு­தல்கள் குறித்து நாட்டில் அர­சியல் தலை­வர்கள் எவரும் கவ­னத்தில் கொள்­ளா­த­தோடு, நாளானதும் இதனைப் புறந்­தள்­ளி ­விட்­டார்கள். இது குறித்த விசா­ர­ணைகள் எது­வுமே ஆக்­கபூர்­வ­மாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. அர­சியல் தலை­மைகள் இந்த விட­யத்தில் இனிமேலும் ஒரு­வரை ஒரு­வர் குறை­ கூறிக்கொண்­டி­ருக்­காமல் அனை­வரும் ஒன்­றி­ணைந்து இனி­யொரு சந்­தர்ப்­பத்தில் இது போன்ற அடிப்­ப­டை­வாதத் தாக்­குதல் இடம்­பெ­றா மல் பார்த்துக் கொள்­வ­தோடு நாட்டில் அமை­தி­யையும் சட்டம், ஒழுங்­கையும் நல்­லி­ணக்­கத்­தையும் நிலை­நாட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்­கின்றோம். முழு நாட்டு மக்­க­ளையும் பாது­காக்க வேண்டும் என்ற பொது நோக்­கத்­துடன் செயற்­ப­டு­மாறு சகல அர­சியல் தலை­வர்­க­ளையும் கேட்டுக் கொள்­கிறோம். தாக்­கு­தல்­களைத் தடுக்க முடி­யாத   அர­சாங்கம்  வீடு செல்­லு­மாறு  நாம் கோரு­கிறோம்” என்று கர்­தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்­டகை மிகவும் கார­சா­ர­மான விமர்­ச­னத்தை முன்­வைத்­தி­ருக்­கின்றார். 

பல்வேறு கோணங்கள்

அவரின் கோணத்தில் இந்த விமர்­சனம் சற்றுக் கார­மா­ன­தாக இருந்­தாலும் கூட 250 க்கும் மேற்­பட்ட உயிர்­களைப் பலி­கொண்ட இந்தத் தாக்­குதல் தொடர்­பான ஆதங்­கத்தை அவர் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார். தவறு விடப்­பட்­ட­மையை நியா­யப்­ப­டுத்­தாமல் இது தொடர்­பான ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட ­வேண்டும் என்­பதே கர்­தினால் ஆண்­ட­கையின் கோரிக்­கை­யாக உள்­ளது. 

இதே­வேளை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஆண்­ட­கையின் உரைக்கு  அதிரடியான பதிலை வழங்­கி­யி­ருக்­கிறார். அதா­வது ஏப்ரல் 21 தாக்­கு­தலின் பின்­ன­ரான காலத்தில் அர­சாங்கம் தனது அனைத்துக் கட­மை­க­ளையும் நிறை­வேற்­றி­யுள்­ளது.  ­தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய பயங்­க­ர­வாத அமைப்­பை இலங்­கை­யி­லி­ருந்து ஒழித்­தது மாத்­தி­ர­மன்றி, அத்­தாக்­குதல் இடம்­பெ­று­வ­தற்கு ஏது­வாக அமைந்த சகல விட­யங்கள் தொடர்­பா­கவும் தற்­போது பக்­கச்­சார்­பற்ற சுயா­தீ­ன­மான விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.  எனினும் சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணைகள் நடை­பெ­ற­வில்லை. அர­சாங்கத் தலை­வர்­க­ளுக்கு முது­கெ­லும்­பில்லை; அவர்கள் வீடு செல்­ல­ வேண்டும் போன்ற விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. 

நாங்கள் வீடு செல்­லத்தான் இருக்­கின்றோம். நிரந்­த­ர­மாக தங்­கு­வ­தற்கு நாங்கள் வர­வில்லை. உத்­தி­யோ­க­பூர்வ காலம் முடிந்­ததும் வீடு செல்வோம். தேவை­யெனின் மீண்டும் தேர்­த­லுக்கு முகம்­ கொ­டுப்போம். அதனை யாரும் சொல்­ல ­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. எமக்கு சிறந்த முது­கெ­லும்பு உள்­ளது. 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி எனக்கு முது­கெ­லும்பு உள்­ளது என்­ப­தைக் காட்­டினேன். அதன் பின்னர் பத­வியில் இருந்த பிர­த­மரை நீக்கி முன்னாள் ஜனா­தி­ப­தியை பிர­த­ம­ராக்கி எனக்கு முது­கெ­லும்பு உள்­ளது என்­ப­தைக் காட்­டி­னேன்­. இ­தனால் தமது தனிப்­பட்ட அர­சியல் நிகழ்ச்சி நிர­லுக்­க­மைய ஏப்ரல் 21 தாக்­குதல் தொடர்பில் தீர்­மா­னங்­களை முன்­வைக்க வேண்­டா­மென சகல தரப்­பி­ன­ரி­டமும் கேட்­டுக்­கொள்­கின்றேன்.  அர­சியல் நிகழ்ச்சி நிர­லுக்கு அமை­யவே முது­கெ­லும்பு இல்லை என்று கூறு­கின்­றனர்.  யாராக இருப்­பினும்  என்­னுடன் வெளிப்­ப­டை­யாகக் கலந்­து­ரை­யாட முடியும்.  தேவை­யேற்­படின் ஊட­கங்­க­ளுக்கு முன்­னாலும் அதனை மேற்­கொள்ள முடியும். மறைந்து நின்று பேச­ வேண்­டி­ய­தில்லை. என்­னுடன் நேரடியாகப் பேச வாருங்கள்”   

இவ்­வாறு மிகவும் கார­சா­ர­மான பதிலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெளி­யிட்­டி­ருக்­கின்றார்.

உண்­மையில்   மதத் ­த­லை­வர்­களும் அர­சியல் தலை­வர்­களும் முரண்­பட்­டுக்­கொண்­டி­ருக்­காமல் ஒன்­றி­ணைந்து செயற்­ப­ட­ வேண்­டிய இக்­கட்­டான காலட்­டத்தில் நாங்கள் இருக்­கின்றோம். தற்­போ­தைய நெருக்­க­டி­மிக்க இந்தச் சூழலில் மதத் ­த­லை­வர்­களும் அர­சியல் தலை­வர்­களும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வதன் மூலமே தீய சக்­தி­களை அகற்றி நாட்டில் ஒற்­று­மை­யையும் புரிந்­து­ணர்­வையும் ஏற்­ப­டுத்த முடியும். கர்­தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்­ட­கையின் ஆதங்­கத்தை அரச தரப்பு  புரிந்­து­கொள்­ள­வேண்டும். 

நாட்டில் குண்­டு­வெ­டிப்புச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­ற­வுடன் ஏற்­ப­ட­வி­ருந்த பாரிய அழிவை மெல்கம் ரஞ்ஜித் ஆண்­டகை நேர­டி­யாக தலை­யிட்டு தடுத்­தி­ருந்தார். குண்டுவெடிப்பு இடம்­பெற்­ற­துடன் அது ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளால் முன்­னெ­டுக்­கப்­பட்­டது என்­பது தெரிந்­த­தும் அப்­பாவி முஸ்லிம் மக்­களை யாரும் துன்­பு­றுத்­தக் ­கூ­டாது என்­பதை கர்­தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்­டகை மிகவும் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்திருந்தார். உண்­மையில் அவரின் அந்த அறி­விப்பின் பய­னா­கவே 22 மற்றும் 23ஆம் திக­தி­களில் நாட்டில் எவ்­வி­த­மான அசம்­பா­வி­தங்­களும் நடை­பெ­ற­வில்லை என்­ப­துடன் பாரிய சேதங்கள் தடுக்­கப்­பட்­டன. 

குண்டுவெடிப்புச் சம்­பவம் இடம்­பெற்­றதும் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த பாது­காப்புத் தரப்­பினர் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தனர். அந்த விட­யத்தில் அனை­வரும் அப்­போது திருப்தி அடைந்­தி­ருந்­தனர். எனினும் இதன் பின்னர் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெ­றா­த ­வ­கையில் செயற் ­ப­டு­வ­தற்கு என்ன மதிப்­பீ­டுகள் செய்­யப்­பட்­டன என்­பதே கர்­தினால் ஆண்­ட­கையின் கேள்­வி­யாக, ஆதங்கமாக  உள்­ளது. 

அதே­போன்று யாரு­டைய அச­மந்தப் போக்­கினால் இந்தப் பேர­ழிவு இடம்­பெற்­றது என்­பது குறித்தும் ஆரா­ய ­வேண்டும் என்­பதையே அனை­வரும் கோரு­கின்­றனர். அத­னையே கர்­தினால் ஆண்டகையும்  வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார். யார் இதற்கு பொறுப்­புக்­ கூ­ற வேண்டும் என்­பது வெளிப்­ப­டுத்­தப்­ப­ட ­வேண்டும். அதே­போன்று மக்கள் நிம்­ம­தி­யாக வாழும் சூழலை உறு­திப்­ப­டுத்­த­ வேண்டும். இதன் பின்னர் இவ்­வா­றா­ன­தொரு அசம்­பா­விதம்  நடை­பெ­றா­த­ வ­கையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதும் அவசியம்.  மிக விசேடமாக மக்கள் மத்தியில் காணப்படுகின்ற அச்ச நிலைமை போக்கப்பட வேண்டும். 

புரிந்துகொள்ள வேண்டும்

பாதுகாப்புத் தரப்பினர் கடந்த மூன்று மாத காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். அந்த நிலைமை நீடிக்க வேண்டும். இவ்வாறான அடிப்படைவாத அமைப்புகள் முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டியது அத்தியாவசியமாகும். கொல்லப்பட்ட மக்களின் சமயம் சார்ந்த தலைவர் என்ற அடிப்படையில் கர்தினால் ஆண்டகையின் ஆதங்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் இந்த இடத்தில் மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்படுவதே மிக முக்கிய தேவையாக இருக்கின்றது. 

இதன் மூலமே நாட்டில் தேசிய ஒற்றுமையைப் பலப்படுத்துவதுடன் அடிப்படைவாத அமைப்புகளைத் துடைத்தெறிய முடியும். எனவே தொடர்ந்தும் முரண்பாடுகளை வளர்த்துக்கொள்ளாமல் இணைந்து செயற்படுவதற்கான வழிமுறைகளை தலைவர்கள் ஆராய  வேண்டும். குறிப்பாக மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து ஒரு பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்புவது குறித்து ஆராய வேண்டும். இந்தத் தாக்குதல் சம்பவங்களினால் கடுமையாக பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறை தற்போது ஓரளவு படிப்படியாக மீண்டு வருகிறது. அதேபோன்று உள்நாட்டு வர்த்தகத் துறைகள், வெளிநாட்டு முதலீடுகளும் பாதிக்கப்பட்டன. எனவே இவை அனைத்தையும் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும். அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பதே மிகவும் அவசியமாகிறது. அதனால் தோன்றியிருக்கின்ற முரண்பாடுகளை ஒருபக்கம் வைத்துவிட்டு அமைதி யான, பாதுகாப்பான நாட்டைக் கட்டி யெழுப்புவதற்கு அரசியல், மத மற்றும் சிவில் தலைவர்கள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியதே காலத்தின் தேவையாக இருக்கிறது. 

- ரொபட் அன்­டனி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41