ஆப்கானிஸ்தான் நாட்டின் கான்ஸி மாகாணத்தில் இன்று பெற்றோல் டேங்கர் லொறி மீது பஸ் மோதிய கோர விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 52 பயணிகள் பலியாகியுள்ளனர்.

மேலும், படுகாயமடைந்த 73 பேர் அருகாமையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த விபத்தின் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.