வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் இங்கிருந்து நீர்கொழும்பிற்கு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக புனர்வாழ்வு நிலையத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா நலன்புரி நிலையத்தில் நீர்கொழும்பு பகுதியில் கடந்த 21,04 கொழும்பில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் காரணமாக தங்கவைக்கப்பட்டிருந்த 113பேர் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இதில் அண்மையில் வவுனியாவிலிருந்து நீர்கொழும்பு முகாமிற்கு 20பேர் தமது சுயவிருப்பின் காரணமாக சென்றுள்ளனர்.
இந்நிலையில் தற்போது 15பேர் பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலிருந்து நீர்கொழும்பிற்கு தமது சுயவிருப்பில் செல்ல விரும்பம் தெரிவித்துள்ள நிலையில் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து நேற்று முந்தினம் ஐவரும், நேற்று இரவு ஒருவரும் சென்றுள்ளதாகவும் மேலும் 9பேர் செல்ல விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் அவர்களுக்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லையெனவும் தற்போது 87பேர் குறித்த முகாமில் இருப்பதாகவும் புனர்வாழ்வு நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியாவில் குறித்த அகதிகளை தங்கவைப்பதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பலவிதமான எதிர்ப்புக்கள் வெளிவந்திருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM