சட்டமா அதிபர் தபுல டி லிவேராவிடம் தெரிவுக்குழு விசாரணைகளை நடத்தினர்

Published By: R. Kalaichelvan

27 Jul, 2019 | 08:35 AM
image

(ஆர்.யசி )

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளிக்க வரவழைக்க சட்டமா அதிபர் தபுல டி லிவேராவிடம் தெரிவுக்குழு விசாரணைகளை நடத்தினர்.

முதலில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள பணிக்கப்பட்ட போது சட்டமா அதிபர் சத்தியப்பிரமாணத்தை செய்துகொண்டார். அதன் பின்னர் தெரிவுக்குழு தலைவர் விசாரணைகளை ஆரம்பிக்க தயாரானார்.

கேள்வி :- இதற்கு முன்னர் சாட்சியமளிக்க வந்தவர்கள் கூறும் போது என் ..ஜே அமைப்பை தடுக்க நீங்கள் முயற்சிகளை எடுக்கவில்லை என  கூறினார். அது உண்மையா? 

சட்டமா அதிபர்  :- இந்த கேள்விகளுக்கு  முன்னர் நான் சில விடயங்களை கூற வேண்டும், என்னை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள கூறுகின்றீர்கள்.நான் சாட்சியாளர் அல்ல. என்னிடம் சில காரணிகளை கேட்டரியவே நீங்கள் என்னை அழைத்தீர்கள். 

குழு:- இது முரண்படக்கூடிய காரணம் அல்ல. 

சட்டமா அதிபர் :- நான் ஒரு சட்டமா  அதிபர், என்னை நீங்கள் இவ்வாறு வலியுறுத்துவது எனது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும். இன்று தெரிவுக்குழு முன்னிலையில் என்னையும் அழைத்து சாட்சியம் எடுத்துவிட்டு மீண்டும்  இந்த அறிக்கையை மீண்டும் என்னிடம் அனுப்ப வேண்டும். இந்த சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வு  துறைக்கும் சட்டதுறைக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியுள்ளேன். மேல் நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளது. இந்த செயற்பாடுகளை  எதிர்காலத்தில் முன்னெடுக்க முடியும். அடிப்படை மனித உரிமை மீறல் விடயங்களை விசாரணைகளுக்கு எடுக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபராக நான் , இந்த செயற்பாடுகளில்  எந்த தரப்பாக இருந்தாலும் எனது சாட்சியை நீதிமன்றத்தில் முன்வைக்க முடியும். அதனை நீதிமன்ற விசாரணைக்கு பயன்படுத்த முடியும். இந்த ஆணைக்குழுவில் பேசும் விடயங்கள் அந்த வழக்குகளுக்கு ஒரு தரப்பாக எடுக்க முடியும். குறிப்பாக இவ்வாறான நிலையில் எனது சாட்சியை நீதிமன்றத்தில் நியமித்தால் அது குழப்பும். என்னையும் சாட்சியாளராக உருவாக்கும், நான் ஒரு சட்டமா அதிபர். ஆகவே இதில் பிரச்சினை உள்ளது. எனவே இந்த விசாரணைக்கு  உரிய நபர்களுக்கு சாட்சியங்களை நீதிமன்றத்தில்  சமர்ப்பிக்க வலியுறுத்தியுள்ளேன். நான் ஒரு சட்டத்தரணியாக என எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளேன். இந்த ஆணைக்குழு மூலமாக நானும் ஒரு சாட்சியாளராக நீதிமன்றத்தில் நிற்க வேண்டும். 

இந்த ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியளிக்ககையில் அமைச்சரவைகாக நான் பொறுப்புக்கூறும்  விடயம் மீறப்படும்.  அதேபோல் இன்னொரு விடயம் உள்ளது. அதாவது சாட்சியாளராக நான் இங்கு சாட்சியமளித்தால் குற்றவியல் விசாரணைகளில் குற்றச்சாட்டு வழக்கு முன்வைத்தால் அதிலும் நான் முகங்கொடுக்க வேண்டிய நிலைமை உருவாகும், அதிலும் என்னை சாட்சியாளராக அடையாளபபடுத்தினால்  மேன் முறையீடு செய்யும் எனது உரிமையும் பறிக்கப்படலாம்.ஆகவே நான் இந்த இடத்தில் சாட்சியமளித்தால் எதிர்காலத்தில் எனது கடமைகள் தனிப்பட்ட செயற்பாடுகளில் பிரச்சினைகளும் உருவாகும். இப்போது விசாரணைகளின் செயற்பாட்டு மட்டத்தில் உள்ளது. ஆகவே எனது கருத்துக்களை கவனத்தில் கொண்டு உங்களின் கருத்துக்களை கூற வேண்டும் என நினைகின்றேன். 

குழு :- உங்களால் சாட்சியமளிக்க முடியாது போனால் உங்களின் இரண்டாம்  நிலை நபருக்கு சாட்சியமளிக்க முடியும்.

சட்டமா அதிபர் :- சரி, உங்களின் அழைப்பின் பெயரில் நான் இங்கு வந்தேன். எனது அதிகாரிகளுக்கு  இதற்கு சாட்சியமளிக்க அதிகாரம் இருக்கும். அதற்கான ஏற்பாடுகளை நான் செய்து தருகின்றேன். என்னால் எழுத்து மூலமாக இதனை முன்வைக்க முடியும். 

இதனை அடுத்து குழு 15 நிமிடங்கள் சபையை ஒத்துவைத்து தனிப்பட்ட முறையில் கூடி ஆராய்ந்தது.

மீண்டும் கூடிய குழு :- உங்களின் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொளிறோம். நீங்கள் காரணிகளை கூற வேண்டிய அவசியம் இல்லை. ஏனைய அதிகாரி ஒருவரை  நியமிக்க முடியும். 

சட்டமா அதிபர் :- நவாவி  என்ற நார் வெளிநாட்டில் உள்ளார். இன்னொருவர் உள்ளார் அவருக்கு இதனை கையாள முடியும். கோப்புகளும் உள்ளது. அதில் முழுமையாக கோப்புகள் இப்போது எம்மிடம் இல்லை. உங்களுக்கு உயர் அதிகாரி தான் வேண்டுமா?

குழு :- ஆம். 

சட்டமா அதிபர் :-அப்படிஎன்றால் திங்கட்கிழமை முடியும் 

குழு :- நாம் நிலைமைகளை ஆராய்கின்றோம். சட்டமா அதிபர் இல்லை என்றால் உயர் அதிகாரி ஒருவரை அழைக்க வேண்டும். சிறிய அதிகாரிகளை எமக்கு அழைக்க அவசியம் இல்லை. உங்களுக்கு அடுத்த படியாக  யார் குற்றவியல்  விடயங்களுக்கு பொறுப்பாக உள்ளார் ?

பதில்:- அசிஸ்  தான் உள்ளார் 

குழு :-அவர் இப்போது இல்லையா ?

பதில் :- அசிஸ் என்ற நபரும் உள்ளார்.அவரை இன்று அழைக்க முடியும்.ஆனால் என்னால் உறுதியாக கூற  முடியாது. 

குழு :- தர்மவர்தன உள்ளார் தானே அவரை விசாரிக்க அனுமதிக்க முடியுமா

சட்டமா அதிபர் :- ஆம் ஆனால் மெதுவாக விசாரணைகளை நடத்துங்கள். அவர்கள் உங்களுக்கு தகவல்களை கூறுவார்கள். அவர்களிடம் நிறைய கோப்புகள் உள்ள காரணத்தினால் நீங்கள் மெதுவாக கேளுங்கள். நீங்கள் இந்த ஏற்பாட்டை செய்து கொடுத்ததற்கு நன்றிகளை கூறுகின்றேன். நான் உங்களிடம் இருந்து விடைபெரலமாக. 

குழு :- ஆம் நீங்கள் செல்ல முடியும் நன்றி.

தர்மவர்தன  :- சஹரான் குறித்த இன்டர்போல் அறிக்கையை சட்டமா அதிபர் திணிக்கலம்  பெற்றுக்கொள்ளவில்லை. 

குழு :- நீங்கள் பாதுகாப்பு அதிகாரிகளின் டி.ஐ.டி கடிதத்தை பெற்றீர்களா?

தர்மவர்தன:- ஆம் பெற்றுக்கொண்டோம்,

குழு :- இதற்கு என்ன பதில்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது?

தர்மவர்தன:-இந்த இணையம் மூலமாக அடிப்படைவாதத்தை பரப்பும் செயற்பாடுகளை  என்.டி.ஜே அமைப்பு மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கி மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை குழப்பும் நடவைக்கை எடுக்கபடுகின்றது ஆகவே காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் மௌலவி சைனி மற்றும் சஹரான் குறித்த காரணிகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே இந்த காரணத்தினால் என்.டி,ஜே அமைப்பின் இணைய மற்றும் சமூலம் செயற்பாடுகளை தடுக்கவும் இவர்களை கைது செய்ய முடியுமானால் அதனை செய்ய வேண்டும் என கூறப்படுள்ளது. 

கேள்வி :- அவர்களுக்கு நீங்கள் பதில் கூறவில்லை  , நீங்கள் பதில் கூறினீர்களா ?

பதில் :- "ப்ளூ சீட்"இல் சில விடயங்கள் இருந்தது,

கேள்வி :-கேள்விக்கு பதில் கூறினீர்களா? நான் கேட்கும் கேள்விக்கு  பதில் கூறுங்கள் ?

பதில் :-இல்லை பதில் கூறவில்லை,

கேள்வி :-2018.05.18 வந்த கடித்ததுக்கு பதில் கூறினீர்களா? அதில் என்ன இருந்தது ?

பதில் :- அதே கோரிக்கை தான். 

கேள்வி :- என்ன கூறியுள்ளனர் ? முதல் கடிதத்தில் வலைதளத்தை  தடுக்க வேண்டும் என்றா கூறப்பட்டது? 

பதில்:- ஆம் 

கேள்வி :- அடுத்ததில் என்ன இருந்தது ?

பதில் :- அதே காரணி  தான். தவ்ஹித்  ஜமாஅத் அமைப்பினதும் அதன் உறுப்பினர்களுக்கு  எதிராக சட்ட நடவடிக்கை  எடுக்க நீங்கள் பதில் கோரவில்லை எமக்கு ஆலோசனை தாருங்கள் என கேட்டுள்ளனர். 

கேள்வி :- ஒரு வருடத்திற்கு பின்னரும்  நீங்கள் பதில் கூறாத  காரணத்தினால் மீண்டும் பதில் கேட்டுள்ளனர். வேறு என்ன கோரிக்கை விடுத்துள்ளனர்?  

பதில் :- இரண்டு நபர்களின்  பெயர்களை கூறி அவர்களை கைது செய்ய சட்ட ஆலோசனை வழங்க வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது. இரண்டு பக்கங்கள் கொண்ட கோரிக்கை அது,  சஹரானின்  முகப்புத்தக கணக்கு குறித்தும் கூறியுள்ளனர். 

கேள்வி :- 63 பக்கங்கள் கொண்டதா?  

பதில் :- ஆம், அதில் சஹரனின் முகப்புத்தக  விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. வலைத்தளம்  குறித்து என்ன செய்வது என்றே கூறப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து செயற்பட இலங்கையில் சட்டங்கள் இருக்கவில்லை ஆகவே நீங்கள் கேட்ட கேள்விக்கு அமைய  2018 ஜூன் மாதம் இரண்டாம்  கடிதம் வந்தது. 

கேள்வி :- நீங்கள் அதற்கும் பதில் கூறவில்லையா ?

பதில் :- இல்லை , 2019 ஆம் ஆண்டு இது குறித்து விசாரணை நடத்தி சட்டமா அதிபர திணைக்கள கூட்டத்தில் கூறினார்கள்.  

குழு :- முதல் கடிதத்திற்கு  பதில் இல்லை. இரண்டாம் கடித்தத்திட்கும்  பதில் இல்லை, பின்னர்  பத்து மாதங்கள் கழித்து அவர்களை நீங்கள் பேச்சுவர்த்தைக்கு அளித்துள்ளீர்கள். 

பதில் :- பொறுங்கள்,  நிகழ்ச்சி நிரலை பார்த்து பதில் கூறுகின்றேன். சட்டத்தரணி அசீஸ் இவற்றை பார்த்து சில காரணிகளை  முன்வைத்துள்ளார். முறையான காரணிகள் இல்லாத காரணத்தினால்  அது குறித்து இந்த ஆண்டு மார்ச் மாதம் பேசினோம்.  

கேள்வி :- யாராவது செய்த முறைப்பாடு குறித்து எதும் இருந்ததா?  

பதில் :- இல்லை இந்த கடிதங்களில் முறைப்பாடுகள் குறித்து ஒன்றும்  கூறவில்லை. மார்ச் மாத கூட்டத்தில் தான் இந்த காரணிகளைக்  கூறியுள்ளனர். 

கேள்வி :- இதற்கு எடுத்துள்ள நடவடிக்கை  என்ன ?

பதில் :- அது குறித்து பதிவுகள் இல்லை. டி.ஐ.டி இடம் பேசியுள்ளார் 

கேள்வி :- எப்போது? 

பதில் :- அது குறித்து பதிவு இல்லை 

கேள்வி :- பொதுவாக  எதுவும் நடக்காத போதும் கூட  நிகழ்ச்சி நிரலில் நீங்கள் பதிவீர்கள். ஆனால் இதில் அனைத்துமே தலைகீழாக  உள்ளது. 

பதில் :- டி.ஐ.டி அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

குழு :- சாட்சியங்களை பார்க்கையில்  இந்த நிலைமகளை அனைவரும் அறிந்துள்ளனர். ஆரம்பத்தில் இல்லாத போதும் பின்னர் இந்த குழுக்கள் குறித்து பிடியாணை கேட்கப்பட்டுள்ளது, சட்டமா அதிபரின் ஆலோசனை இரண்டு தடவைகள் கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு ஆண்டுகளாக  நீங்கள் ஒன்றும் செய்யவில்லை.  

பதில் :- ஆம்  நீங்கள் கூறியதில் பிழை இல்லை, எனினும் இந்த கடிதங்களில் முகப்புத்தக  பதிவுகள் குறித்து தான் பேசியுள்ளனர் முரண்பாடுகள் குறித்து ஒன்றும் கூறவில்லை. 

கேள்வி :- டி.ஐ.டி கூறிய காரணிகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் மூலமாக பதில் கூறவில்லை. இந்த தாக்குதலை தடுக்க இருந்த நிலைமைகளையே நாம் ஆராய்கின்றோம்.. அவர்கள் காரணிகளை கூறி இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

பதில் :- கோப்புகளை பார்க்கையில்  விளங்குவது என்னவென்றால், பொலிஸார்  சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு  என்.டி.ஜே வின் செயற்பாடுகள் குறித்தும் காத்தான்குடியில்  அவர்களின் அட்டகாசங்கள் குறித்து கூறவில்லை. இணையம் முகப்புதகம் குறித்தே பேசியுள்ளனர். சரியான தகவல்களை தந்திருந்தால் சிவப்பு எச்சரிக்கை விடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்க முடியும்.பொலிசார்  அதனை செய்யவில்ல. என் டி.ஜேவின் செயற்பாடுகள் குறித்து கூறவில்லை. அவர்களின் முகப்புத்தக பதிவுகள் அதுவும் தமிழ் உளவுத்துறை  கூறியுள்ளனர். 

குழு :- இதில் தமிழ் மட்டும் இல்லை இறுவெட்டு சிங்களத்தில் உள்ளது நீங்கள் இதனை பார்க்கவில்லையா? உங்களின் நிகழ்ச்சி நிரலில் ஒரு பிரதி எங்களுக்கு வேண்டும். இந்த வீடியோக்களை நீங்கள் எப்போது பார்த்தீர்கள். குண்டு வெடிப்பிற்கு பின்னரா? சட்டமா அதிபர் திணைக்களம் சில விடயங்களில் பொறுப்புக்களை  ஏற்றுகொள்ள வேண்டும். அதனால் தான் நாம்  சிரேஷ்ட  உறுப்பினர் ஒருவரைக்  கேட்டோம். எனினம் உங்களின் பக்கமும் பல தவறுகள் உள்ளன. 

கேள்வி :- சட்டமா அதிபர் திணைக்களம்  ஐ.சி.சி.பி.ஆர் ஆலோசனையை பெற்றதாக  அறிய முடிகிறது. எனினும் நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என போலிஸ் கூறுகின்றது இது குறித்து என்ன கூறுகின்றீர்கள் ?

பதில் :- என்னிடம் இப்போது உரிய கடிதம் ஒன்று உள்ளது. அதில் இலங்கை பொலிஸ்  டி.ஐ.டி கூறியுள்ள விடயம் ஐ.சி.சி.பி.ஆர்  2017 படி எந்த காரணிகளும் இல்லை. மாறாக முகப்புத்தகங்கள்  குறித்து சட்டத்தை மீறி செயற்பட்டதாக  உறுதியாகிறது. ஆகவே அதற்கமைய செயற்பட்டுள்ளோம் . 

கேள்வி :- நீங்கள் சஹாரானின்  வீடியோக்களை பார்த்தீர்களா ? சட்டமா அதிபர் திணைக்களமாக உங்களிடம் கேட்கிறேன் ?

பதில் :- காணொளியை பார்த்ததாக  அந்த காரணி குறித்து பதினைந்து பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை சட்டத்தரணி  அசிஸ் முன்வைத்துள்ளார். 

கேள்வி :- இது எப்போது 

பதில் :- சம்பவத்தின் முன்னர் 

கேள்வி :- பார்த்தும் ஒரு ஆலோசனை வழங்க நினைகல்வில்லையா?  

பதில் :- அதனால் தான் மார்ச் மாதம் அழைத்து பேசியுள்ளோம் 

கேள்வி :- ஒரு வருடம் கடந்த பின்னர், சரி அசிஸ் தான் இதனை பார்த்துள்ளார் நடவடிக்கை  எடுக்கவில்லை குண்டு வெடித்துள்ளது. இறுதியா நீங்கள் ஒரு அறிக்கை கொடுத்துள்ளீர்கள்.  இதுவா நடந்தது ?

பதில் :- இல்ல நீங்கள் கூறுவது தவர். முதல் முறைப்பாட்டில் "ஸ்க்ரீன் ஷாட் " மட்டும் தான் உள்ளது. எந்த காரணிகளும் இதில் இல்லை. இரண்டாவது  கடிதத்தில்  அதன் சிங்கள மொழிபெயர்ப்புடன் சில காரணிகளை முன்வைக்கப்பட்டுள்ளது. அது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. 

கேள்வி :- உங்களின் திணைக்களம் இந்த தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காது இருந்துள்ளது. இது மிகவும் முக்கிய தவறு, அதாவது உங்களின் கடமையை நீங்கள் சரியாக  செய்யாது ஒதுங்கியுள்ளது என்பது தெளிவாக தெரிகின்றது. குற்றங்கள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படாது இருந்துள்ளது. அவர் உங்களை அனுப்பினதால் உங்களிடம் நான் கேட்கிறேன். 

பதில் :- இந்த விடயங்களை பார்கையில் குற்ற பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி இதனை  பார்க்க வேண்டும். அவரிடம் நான் இது குறித்து அதாவது நீங்கள் கூறிய விடயங்களை முன்வைக்கின்றேன், 

இதன் பின்னர் சட்டத்தரணி அப்துல் அசிஸ் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டார். 

கேள்வி :- டி.ஐ.டி கடிதத்தை பார்த்தீர்களா?

பதில்:-  உரிய கடிதத்தை நான் பார்த்தேன். டி.ஐ.டி அதிகாரிகள் இது குறித்து பேசிய நேரத்தில் முதலில் நான் இந்த கடித்ததை பார்த்தேன். 

கேள்வி :- இந்த கடிதத்தில் சாட்சியம் போதாது என நீங்கள் கூறுகின்றீர்களா?

பதில் :- ஆம், இதில் இரண்டு காரணிகள் உள்ளது. ஹிஸ்புல்லா மண்டபத்தில் சஹரான், செய்னி இருவரும் ஆற்றிய உரைகள் மற்றும் என்.டி.ஜே அமைப்பின் முகப்புத்தக மற்றும் சஹரானின்  முகப்புத்தக "ஸ்க்ரீன் ஷாட் " மட்டுமே உள்ளது. இதனை வைத்து எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இவர்களின் செயற்பாடுகள் யார் உறுப்பினர்கள் என்ற காரணிகள் கூரியில்லை. 

கேள்வி :- 2018ஆம் ஆண்டில் அனுப்பின கடிதத்திலும் ஆதாரங்கள்  இல்லையா? 

பதில் :- இதில் பல காணொளிகள் உள்ளது. நீண்ட நேர பதிவுகள் இவை. பல காரணிகள் உள்ளது. இதன்போதும் குறித்த நபர்கள் குறித்தும், அவர்களை கைது செய்துள்ளனரா என்ன காரணிகள் குறித்தும் தகவல்கள் ஒன்றுமே இல்லை. முறையாக அவை பதிவாகவில்லை என்பதே குறைபாடு. இவர்கள் நேரடி முரண்பாடுகலில் அவர்கள் இருந்ததாக தெரியவில்லை. 

கேள்வி :- கடிதம் குறித்து எப்போதில் இருந்து செயற்பட ஆரம்பிதீர்கள் ?

பதில் :- சில கேள்விகள் என்னால் பதில் கூற முடிந்தவை அல்ல. எனது உயர் அதிகாரிகளின் அனுமதியை பெற வேண்டும். 

கேள்வி :- நவாவி உங்களுக்கு கடித்ததை மூன்று நாட்களுக்குள் அனுப்பியுள்ளார். ஆனால் நீங்கள் ஒன்றரை  ஆண்டு காலமாக  கவனத்தில் கொள்ளவில்லை 

பதில் :- துரதிஷ்டவசமாக சம்பவம் தான் 

கேள்வி :- இந்த கடித்தம் முக்கியமான கடிதம் என்ற காரணத்தினால் தான் உங்களுக்கு அனுப்பியுள்ளார். 

பதில் :- ஆம் ஏற்றுக்கொள்கிறேன்.  

கேள்வி :- நீங்கள் ஏன் விரைவாக செய்யட்படவில்லை,   ஐ.சி.சி.பி.ஆர் பற்றி  நன்றாக தெரியுமா? 

பதில் :- ஆம் 

கேள்வி :- யாரை கைது செய்ய முடியும் ?

பதில் :- தேசியத்திற்கு எதிராக யுத்தத்தை உருவாக்கியதாக முயற்சிக்கும் நபர்களுக்கு  எதிராக கைது செய்ய முடியும் 

கேள்வி :- சஹரானுக்கு எதிராக  வழங்கிய அந்த காரணிகளில் இந்த செயற்பாடுகளில் ஈடுபட்டார்   என விளங்கவிலையா ?

பதில் : ஆம் 

கேள்வி :- அதனை ஏற்றுக்கொள்கிறீர்களா ?  

பதில் :- ஆம் ஏற்றுக் கொள்கின்றேன்.

கேள்வி :-   ஐ.சி.சி.பி.ஆர்ரின் கீழ் நீங்கள் ஆலோசனை வழங்கவில்லை. அப்படி தானே?  உங்களுக்கு தெரியுமா புத்தகம் ஒன்றை  எழுதி ,   ஐ.சி.சி.பி.ஆர் கீழ் ஒருவர்  கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது தெரியுமா? 

பதில் :- ஆம் தெரியும் 

கேள்வி :- இவர் பபுத்தகமாக  வெளியிடவில்லை.  முகப்புத்தகத்தில் எழுதினர் என்பது  தெரியுமா? 

பதில் :- ஆம் இது குறித்து வழக்கு முன்னெடுக்கப்படுகின்றது அதனால் நான் பேச விரும்பவில்லை 

கேள்வி :- இல்லை நீங்கள்  ஐ.சி.சி.பி.ஆர் பற்றி தெரிந்தும் நடவடிக்கை  எடுக்காது இருந்துள்ளீர்கள்?  

பதில் :- இல்லை, அவர்களின் கடிதத்தில் ஆதாரம் இல்லை. 

கேள்வி :- எனது கேள்விக்கு பதில் கூறுங்கள் ?   ஐ.சி.சி.பி.ஆர் கீழ் கைது செய்ய முடியும் என கூறவில்லை  அப்படி தானே ?

பதில் :- இதற்கு முன்னர் வழங்கிய அனைத்துமே ஆதாரம் இல்லாதது. 

கேள்வி :- குண்டு வெடித்த பின்னர் நீங்கள் என்ன நினைத்தீர்கள்  ?

பதில் :- அது பற்றி கூற வார்த்தை இல்லை., 

கேள்வி :- நீங்கள் சரியாக செயற்படாத உணர்வு வரவில்லையா ?

பதில் :- முழுமையாகா என்னால் ..

கேள்வி :- நான் கேட்கும் கேளிவிக்கு பதில் கூறுங்கள் 

பதில் :- அப்படி நினைத்தேன். 

கேள்வி :- சாரசம்சமாக கூறினார் சட்டமா அதிபருக்கு கிடைத்த தகவல் முழுமையாக இருக்காத காரணத்தினால் உங்களால்  நடவடிக்கை எடுக்க முடியாம போய்விட்டது என்பது என்றுக்கொள்கிறீர்களா?  

பதில் :- ஆம்  

கேள்வி :- தகவல் போதாமை காரணமாக இது முக்கியமான காரணியாக கவனத்தில் கொலவில்லை அப்படி தானே. 

பதில் :- முழுமையாக எமக்கு காரணிகளை முன்வைக்கவில்லை. இப்போது என்னவென்றாலும்  என்றால் கூறலாம் ஆனால் அப்போது அவ்வாறான நடவடிக்கை எடுக்க காரணிகள் இருக்கவில்லை. முதலே காரணிகள் இருந்திருந்தால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இல்லையென்றால் எதாவது செய்திருக்க முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14