நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட வேண்டுமாயின் விரைவில் அரசியல் தீர்வை முன்வைப்பதைத் தவிர மாற்று வழியில்லை என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா. சம்பந்தன் தெரிவித்தார். 

இன்றைய அரசு இதனை உணர்ந்து செயல்படுவதாகவே நாம் உணருகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

அவுஸ்திரேலியா திருகோணமலைச்சங்கம் மற்றும் அவுஸ்திரேலியா மருத்துவர் உதவி அமைப்பு, சிட்னி சைவ மன்றம் (முருகன் ஆலயம்) ஆகியவற்றின் 4.5 மில்லியன் நிதியுதவியுடன் பாதிக்கப்பட்ட கிராமமான தென்ன மரவடி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட சமூக நிலைய கையளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.