பொரளை பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி உயிரிழந்த விபத்துடன் தொடர்புடைய டிபென்டர் வாகனத்தின் சாரதிக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

பம்லப்பிட்டியில் கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி  பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி ஆனந்த சாகர சரத்சந்திர, டிபென்டர் ரக வாகனத்தால் மோதி படுகாயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்  மஹிந்தானந்த அளுத்கமகேயின் மகன் பயணித்த டிபென்டர் வாகனமே இவ்வாறு பொலிஸார் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இதன் பின்னர் மஹிந்தானந்த அளுத்கமவின் மகன் மற்றும் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் வாகனத்தை செலுத்திய சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையிலேயே டிபென்டர் வாகன சாரதியான நவிந்து உமேஷ் ரத்நாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.