பேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் கடந்த  ஜூலை மாதம் 19 ஆம் திகதியிலிருந்து மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருந்தது.

இதையடுத்து  இன்றையதினம் மாலை 6 மணியில் இருந்து முகாமைத்துவ பீட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் பல்கலைக்கழக முகாமைத்துவம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், பேராதனை பல்கலைகழகத்தின் முகாமைத்துவ பீடம் எதிர்வரும் 29 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.