பிரிட்டனின் புதிய பிரதமராக பொறிஸ்ஜோன்சன் பதவியேற்றுள்ள நிலையில்  சர்வதேச ஊடகங்களின் கவனம் அவரது 31 வயது காதலி கரி சைமன்ட்சை நோக்கி திரும்பியுள்ளது

பொறிஸ்ஜோன்சன் பிரதமர் என்ற அடிப்படையில் நாட்டிற்கு உரையாற்றியவேளை அந்த நிகழ்வில் சைமன்ட்ஸ் காணப்பட்டார்.

இதுவரை பொறிஸ்ஜோன்சனின் முக்கிய நிகழ்வுகளில் எதிலும் கலந்துகொள்ளாதா  கரி சைமன்ட்ஸ் முதல்முறையாக முக்கிய நிகழ்வில் பங்கெடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் பொறிஸ்ஜோன்சனுடன் டவுனிங்ஸ்ரீட் இல்லத்தில் குடியேறுவாரா  , பிரதமருடன் இராஜதந்திர சந்திப்புகளில் இடம்பெறுவாரா என ஊடகங்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளன.

பிரித்தானிய பிரதமர் எவரும் திருமணம் செய்யாமல் துணையொருவரை தன்னுடன் வைத்துக்கொண்டது இல்லை என்பதையும் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

பொறிஸ்ஜோன்சன் தனது முதல் மனைவியை விவகாரத்து செய்துவிட்டதாக இன்னமும் அறிவிக்காததும் குறிப்பிடத்தக்கது.

பொறிஸ்ஜோன்சனின் காதலி பிரதமரின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தில் குடியேறுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை என டவுனிங் ஸ்ரீட் வட்;டாரங்கள் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளன.

பிரிட்டனின் புதிய பிரதமரின் காதலி இன்டிபென்டன்ட் நாளேட்டின் ஸ்தாபகர்களில் ஒருவரான  மத்தியுசைமன்ட்சின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற கல்லூரிகளில் கல்விகற்ற  கரி சைமன்ட்ஸ் கொன்சவேர்ட்டிவ் கட்சியின் ஊடக செயலாளராக பணியாற்றியுள்ளார்.

2012 இல் ஜோன்சன் மீண்டும் லண்டனின் மேயராக தெரிவுசெய்யப்படுவதற்கான  பிரச்சார குழுவில் இவர் இடம்பெற்றிருந்தார்.

29வயதில் கொன்சவேர்ட்டிவ் கட்சியின் தொடர்பாடல் இயக்குநரான கரி சைமன்ட்ஸ் பொறிஸ்ஜோன்சனின் குழப்பகரமான ஆளுமையை மாற்றியமைத்தார் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கரி சைமன்ட்சின் வருகையின் பின்னர் பொறிஸ்ஜோன்சன் உடற்தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது,அவரது எடை குறைந்துள்ளது,சிகையலங்காரத்தில் அவர் மாற்றங்களை செய்துள்ளார், எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.