பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் இமாம் உல் ஹக், காதலித்து ஏமாற்றியதாக இளம்பெண்கள் சிலர் முறைப்பாடு செய்துள்ளனர்.

இமாம் உல் ஹக், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்சமாம் உல் ஹக்கின் உறவினர். இந்நிலையில், இமாம்  உல் ஹக், தங்களை காதலிப்பதாகத் தெரிவித்து ஏமாற்றியதாக 8 இளம் பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதையடுத்த பாகிஸ்தானின் இளம் வீரரான இமாம் உல் ஹக், சில பெண்களுடன் மேற்கொண்ட வாட்ஸ் அப் சாட்களை நபரொருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

குறித்த வாட்ஸ் அப் சட்டில் இமாம் அந்த பெண்களிடம் காதலிப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இமாம், பெண்களின் புகைப்படங்களையும் கேட்டுள்ளார். பின்னர் நான் உன்னை காதலிக்கிறேன். ஆனால்,  என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.