3 இந்திய வம்சாவளியினருக்கு போரிஸ் ஜோன்சன் அமைச்சரவையில் பதவிகள்

Published By: Daya

26 Jul, 2019 | 04:36 PM
image

இங்கிலாந்தில் 3 இந்திய வம்சாவளியினருக்கு போரிஸ் ஜோன்சன் அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.

இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் நேற்று முன்தினம் பதவி ஏற்ற நிலையில், உள்த்துறை அமைச்சராக இந்திய வம்சாவளிப்பெண் 47 வயது பிரித்தி பட்டேல் பொறுப்பேற்றுள்ளார். மேலும் அலோக் சர்மா, ரிஷி சுனாக் ஆகிய இரு இந்திய வம்சாவளியினருக்கு பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது அமைச்சரவையில் வாய்ப்பு அளித்திருக்கிறார். 

போரிஸ் ஜோன்சன், தனது அமைச்சரவையில் முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை அமைச்சர் பதவியை இந்திய வம்சாவளிப்பெண்ணான 47 வயதான பிரித்தி பட்டேலுக்கு  வழங்கியுள்ளார். இதன்மூலம் இங்கிலாந்தில் முதல் இந்திய வம்சாவளி உள்துறை அமைச்சர் என்ற பெருஐமயை பிரித்தி பட்டேல் பெற்றுள்ளார். 

பிரித்தி, லண்டனில் 1972 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி குஜராத்தை பூர்விகமாக கொண்ட சுஷில், அஞ்சனா பட்டேல் தம்பதியரின் மகளாக பிறந்தவர். இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் திரேசா மேயின் அமைச்சரவையில் , சர்வதேச வளர்ச்சித்துறை அமைச்சர் பதவி வகித்தவர்.

வெளிவிவகாரத்துறையிடம் சொல்லாமல் இஸ்ரேல் அரசியல்வாதிகளுடன் பேச்சு நடத்தியதாக எழுந்த சர்ச்சையால், 2017 ஆம் ஆண்டு பிரித்தி தனது பதவியை துறந்தார்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் விவகாரத்தில் திரேசா மே மேற்கொண்ட ஒப்பந்தம் மோசமானது என கூறி, அதற்கு எதிராக தொடர்ந்து வாக்களித்து வந்தார்.

புதிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் தீவிர ஆதரவாளர். இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் நடத்தும் விழாக்களில் எல்லாம் தவறாமல் கலந்து கொள்பவர் என்ற பெயர் பிரித்தி பட்டேலுக்கு உண்டு. பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளரும் ஆவார்.

பிரித்தி பட்டேலின் கணவர் அலெக்ஸ் சாயர், பங்குச்சந்தை சந்தைப்படுத்தல் ஆலோசகர். இந்த தம்பதியருக்கு பிரெட்டி என்ற 11 வயதுடைய மகன் உள்ளார்.

மேலும் அலோக் சர்மா, ரிஷி சுனாக் ஆகிய இரு இந்திய வம்சாவளியினருக்கு பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது அமைச்சரவையில் வாய்ப்பு அளித்திருக்கிறார். 

அலோக் சர்மா, சர்வதேச வளர்ச்சித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ரிஷி சுனாக்கிற்கு குக்கு, கருவூலத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அலோக் சர்மா (51), முந்தைய திரேசா மே அமைச்சரவையில் முதலில் வீட்டு வசதித்துறை பின்னர் வேலை வாய்ப்புத்துறை இராஜாங்க அமைச்சராக இருந்து வந்துள்ளார். ஆக்ராவில் பிறந்த இவர் 5 வயதாக இருந்தபோது பெற்றோருடன் இங்கிலாந்தில் குடியேறினார். அலோக் சர்மாவின் மனைவி சுவீடனை சேர்ந்தவர். இந்த தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இங்கிலாந்தில் பிறந்த ரிஷி சுனாக் (39), இன்போசிஸ் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ஆவார். நாராயண மூர்த்தி, சுதா தம்பதியரின் மகள் அக்‌ஷதாவை இவர் மணந்து கொண்டுள்ளார். இந்த தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் முன்னைய திரேசா மே அமைச்சரவையில் இராஜாங்க அமைச்சர் பதவி வகித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டெல்லி புகையிரத நிலையத்தில் கூட்ட நெரிசலில்...

2025-02-16 07:20:57
news-image

பாப்பரசரின் உடல்நிலை குறித்து வத்திக்கானின் அறிவிப்பு

2025-02-15 13:04:33
news-image

படகுடன் மகனை விழுங்கிய திமிங்கிலம் -...

2025-02-14 17:35:40
news-image

உடல்நலப்பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி

2025-02-14 16:24:16
news-image

புட்டினுடன் டிரம்ப் தொலைபேசி உரையாடல் -...

2025-02-14 15:11:08
news-image

செர்னோபில் அணுஉலையை ரஸ்ய ஆளில்லா விமானம்...

2025-02-14 14:31:15
news-image

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னரும் ஜேர்மனி நாடு...

2025-02-14 13:13:29
news-image

உக்ரைன் யுத்தம் குறித்து இன்று முக்கிய...

2025-02-14 12:22:29
news-image

ட்ரம்பை சந்தித்த இந்திய பிரதமர் .....

2025-02-14 11:07:20
news-image

ஜேர்மனியில் பொதுமக்கள் மீது காரால் மோதிய...

2025-02-14 07:41:47
news-image

தாய்வானில் வணிக வளாகத்தில் வெடிப்பு சம்பவம்...

2025-02-13 15:32:35
news-image

ஆப்கான் தலைநகரில் ஒரே வாரத்தில் இரண்டாவது...

2025-02-13 14:24:17