வடகொரியா தனது ஏவுகணை பரிசோதனைகளை இன்று அந்நாட்டு கிழக்கு கடற்கரை பகுதியில் பரிசோதனை செய்துள்ளது.

கடந்த சில காலமாக அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற இருந்த நிலையில் அது தோல்வியில் முடிந்தது.

இதனை அடுத்து வடகொரியா ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பை முற்றாக நிராகரிப்பு செய்து வந்தார் .

இந்நிலையில் தனது குறுகிய தொலைதூரம் செல்லக்கூடிய ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.