உயர்தரத்தில் கல்விகற்று வந்த மாணவனொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று ஹாலி-எலைப் பகுதியில் உடுவரை பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

ஹாலி-எலை, உடுவரையைச் சேர்ந்த சனிந்து அமித் காலித்திக்க என்ற 20 வயது நிரம்பிய மாணவனே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த மாணவனின் தற்கொலைக்கான காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லையென்றும், இம் மரணத்திலும் சந்தேகம் இருப்பதாகவும் உடுவரை பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த மாணவன் க.பொ.த. உயர்தரப் பரீட்சையை இரண்டாம் முறைக்கு தோற்றும் வகையில், பதுளையில் மேலதிக வகுப்பிற்கு சென்று வந்த பின்னரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.