மக்களுக்கு சேவையாற்றக்கூடிய ஒருவரையே ஜனாதிபதி  வேட்பாளராக ஐ.தே.க நியமிக்கும் ; ராஜித 

Published By: Digital Desk 4

25 Jul, 2019 | 04:43 PM
image

மக்களுக்கு சேவையாற்றக்கூடிய ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி நியமிக்கும் அத்தகைய ஜனாதிபதி வேட்பாளரை நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றியடையச் செய்யவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். என சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்தின தெரிவித்தார்.

குவைத் நாட்டு மக்களின் நன்கொடையினால் யாழ். போதனா வைத்தியசாலையில் நிர்மானிக்கப்பட்ட குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையத்தை திறந்து வைத்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரம சிங்கவையா அல்லது சஜித் பிரேமதாசாவையா நியமிக்கும் எனக் கேட்டபோது

மக்களுக்கு சேவையாற்றக்கூடிய ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கியதேசியக் கட்சி நியமிக்கும் அத்தகைய ஜனாதிபதி வேட்பாளரை நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து வெற்றியடையச் செய்யவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவித்தார்.

கேள்வி : பிரித்தானியாவில் இருந்து இலங்கை்ககு கொண்டு வரப்பட்டுள்ள கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலனில் சுகாதார கழிவுகள் உள்ளதாக தெரிவிக்கப்படுவதாகக் கேட்டபோது,

 பிரித்தானியாவில் இருந்து இலங்கை்ககு கொண்டு வரப்பட்ட கொள்கலன்களில் சுகாதார கழிவுகள் உள்ளதாக எமக்குத்தகவல் வழங்கப்பட்டது. இது தொடர்பில் நாங்கள் நேரில் சென்று ஆய்வு செய்தோம். எனினும் அவ்வாறான சுகாதாரக் கழிவுகள் எவையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. குறித்த கழிவுகள் தொடர்பில் அவை தொடர்பான அமைச்சு மற்றும் அதிகாரிகளே அடுத்த கட்ட நடவடிக்கைகளை செயற்படுத்தவேண்டும் என்றார்.

கேள்வி : யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தியே செயற்படுவார் இந்த நியமனம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் தடை செய்யப்பட்டுள்ளது. இதில் குழப்ப நிலைய ஏற்பட்டுள்ளதாக கேட்டபோது யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தியே செயற்படுவார் இந்த நியமனம்

தொடர்பில் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் இதற்கான முடிவை விரைவில் அறிவிப்பதாகவும்  தெரிவித்தார்

கேள்வி : இணுவில் பகுதியில் சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டபோதும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனக்கேட்டபோது, 

சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கான காணி கத்தோலிக்க திருச்சபை ஆயரினால் தரப்பட்டபோதும் மற்றொரு திருச்சபை ஆயர் தமக்கும் அக்காணியில் உரிமை உள்ளது என கோரியுள்ளனர். 

இதனால் தாமதம் ஏற்பட்டுள்ளது எனினும் விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும். இதேவேளை இதற்காக இந்த வருடமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11