நாட்டின் சில பகுதிகளில் 14 மணிநேர  நீர் வெட்டு அமுலில் இருக்குமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொலன்னாவ, இராஜகிரிய, மொரகாஸ்முல்ல, எத்துல்கோட்டே, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர மற்றும் நாவல ஆகிய பகுதிகளில் 14 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி இன்று (25-07-2019) மாலை 8 மணியிலிருந்து , நாளை (26.07.2019) வெள்ளிக்கிழமை வரை 14 மணிநேர நீர்  வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்  வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அம்பந்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கொலன்னாவைக்கு நீரை விநியோகிக்கும் பிரதான குழாயில் திருத்த வேலை இடம்பெறவுள்ளதால் குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.