இவ்­வாண்­டுக்­கான கல்வி பொதுத்­த­ரா­த­ர சாதாரணதரப்­ப­ரீட்சை எதிர்­வரும் 08 ஆம் ­தி­கதி நடை­பெ­ற­வுள்ள நிலையில் இன்று நள்­ளி­ர­வுடன் இப்­ப­ரீட்­சையுடன் தொடர்­பு­டைய கருத்­த­ரங்கு மற்றும் தனி­யார்­வ­குப்பு நட­வ­டிக்­கை­கள்­ இடை நிறுத்­தப்­பட வேண்டும் என பரீட்­சைகள் திணைக்­க­ளம்­ அ­றி­வித்­துள்­ளது.

பரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால்

விடுக்­கப்­பட்­டுள்ள அறிக்கை ஒன்­றி­லேயே பரீட்­சை­கள்­ தி­ணைக்­கள ஆணை­யா­ளர் ­ட­பிள்யு. எம். கே புஷ்­பகு­மார மேற்­கண்­ட­வாறு தெரிவித்­துள்ளார். அவ்­வ­றிக்­கையில் பரீட்­சை­கள்­ ஆ­ணை­யா­ளர் ­மே­லும்­கு­றிப்­பி­டு­கையில்.

இலங்­கையில் நடை­பெ­று­கின்ற பொதுப்­ப­ரீட்­சை­களின் சட்ட விதி­மு­றைக்­க­மை­வாக பொதுப்­ப­ரீட்­சை­கள் ­ந­டை­பெ­றும்­ தி­னத்­திற்கு ஐந்து நாட்­க­ளுக்கு முன்பு குறிப்­பிட்ட அந்த பரீட்­சையுடன் தொடர்­பு­டைய எந்­த­வொரு கருத்­த­ரங்­கோ அல்­லது தனி­யார்­வ­குப்­புக்கள், கலந்­து­ரை­யாடல், மாதிரி வினாத்­தாள்­ உள்­ளிட்ட விநி­யோக நட­வ­டிக்­கை­க­ளுக்கு எமது பரீட்­சை­கள்­சட்­டத்­தின்­படி தடை­வி­திக்­கப்­படும்.

அந்­த­வ­கை­யில்­ எ­திர்­வரும் 08ஆம் திகதி நாட­ளா­விய ரீதியில் நடை­பெ­ற­வுள்ள கல்வி பொதுத்­த­ரா­தர சாதா­ர­ண தரப்­ப­ரீட்சை தொடர்­பில்­ இன்று நள்­ளி­ரவு முதல் குறிப்­பிட்ட இந்த பரீட்சை தொடர்­பி­லான மாண­வர்­களை அறி­வு­றுத்தும் அனைத்து செயற்­பா­டு­க­ளுக்­கும் ­த­டை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது.

இச்சட்டத்தை எந்த ஒரு தனி யார் கல்வி நிறுவனமோ அல்லது ஆசிரியர்களோ மீறுவார்களா யின்அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவ்வறிக்கையில்மேலும்குறிப்பிடப்பட்டுள்ளது.