மறைந்த நடிகை சில்க் சுமிதா வேடத்தில் ‘த டர்டி பிக்சர்’ படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் வித்யாபாலன்.

தற்போது தமிழில் தயாராகும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடித்து வருகிறார். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகிறது. படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. ஆகஸ்டு 8 ஆம் திகதி படம் வெளியாகவுள்ளது.

இந் நிலையில் அஜித்துடன் நடிப்பது குறித்து வித்யாபாலன் கூறியதாவது:-

“நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்குமாருடன் நடிக்க வாய்ப்பு வந்ததும் சந்தோஷப்பட்டேன். இந்த படத்தில் எனது கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கும். எனக்கு பாடல் காட்சியும் உள்ளது. படப்பிடிப்பில் அஜித்குமாரின் ஆளுமை திறன் என்னை கவர்ந்தது. பெரிய ரசிகர்கள் கூட்டத்தை தனக்கு பின்னால் வைத்திருக்கும் ஒருவர் என் பக்கத்தில் நிற்கிறார் என்பதை நம்பவே முடியவில்லை.

எல்லோருடனும் மிகவும் எளிமையாக பழகினார். பெண்களுக்கு பிடிக்காத விஷயங்களை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தும் அழுத்தமான கதையம்சத்தில் படம் உருவாகி உள்ளது. இந்த கதையை அஜித்குமார் போன்ற பெரிய நடிகரால்தான் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியும் என்றார்.