பழைய சவால்களும் புதிய பிரதமரும் 

Published By: Priyatharshan

25 Jul, 2019 | 12:00 PM
image

லண்டன், ( சின்ஹுவா ) பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்கின்றபோதிலும், நீண்டகாலமாக இழுபட்டுக்கொண்டிருக்கும் ' பிரெக்சிட் ' குழப்பத்துக்கு அக்டோபர் 31 காலக்கெடுவுக்குள்  தீர்வைக்காண்பதில் பழைய பிரச்சினைகள் இன்னமும் நீடிக்கவே செய்கின்றன.

ஜோன்சன் தனது கட்சியை வென்றெடுத்திருக்கிறாரே தவிர நாட்டையல்ல என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டனை இறுதியில் வெளியே எடுப்பதற்கு அவர் தனது கன்சர்வேட்டிவ் கட்சியின் சகபாடிகளை ஐக்கியப்படுத்தவேண்டியிருக்கிறது ; அதை விட முக்கியமாக,  பிளவுபட்டிருக்கும் பாராளுமன்றத்தைை  ஒன்றுசேர்க்கவேணடியிருக்கிறது.

ஜோன்சனின் கடுமையான பிரெக்சிட் நிலைப்பாடு பாராளுமன்றத்தில் முன்வரிசை உறுப்பினர்கள் பலரின்  பதவி விலகலுக்கு வழிவகுகமகக்கூடும். தான் பதவி விலகப்போவதாக நிதியமைச்சர் பிலிப் ஹமண்ட் ஏற்கெனவே பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்.எந்த விதமான உடன்பாடும் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகும் சாத்தியத்தை தன்னால் ஆதரிக்கமுடியாது என்று அவர்  கூறியிருக்கிறார்.

' விவாகரத்து ' உடன்பாடொன்று இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு முயற்சிக்கும் எந்த அரசாங்கத்தையும் கவிழ்த்தே தீருவதென்று உறுப்பினர்கள் சூளுரைத்திருக்கும் நிலையில் பாராளுமன்றத்தில் காணப்படும் முட்டுக்கட்டையை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், ஒன்றியத்துடன் புதிய உடன்பாடொன்றை ஜோன்சன் அரசாங்கத்தினால்  காணமுடியாமல் போகும் பட்சத்தில் உடன்பாடின்றிய பிரெக்சிட்டை திணிக்கமுற்பட்டால் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றில் அரசாங்கம் தோல்வி காணக்கூடும்; உரிய காலத்துக்கு முன்கூட்டியே பொதுத்தேர்தலை எதிர்நோக்கவேண்டியிருக்கும். ஆளும் கன்சரவேட்டிவ் கட்சி முன்னென்றும் இல்லாத வகையிலான சவாலை எதிர்நோக்கும் நிலையில் தேர்தலுக்கு முகங்கொடுப்பதென்பது சிக்கலான விடயமேயாகும். 

பிரெக்சிட்டை சூழவுள்ள நிச்சயமற்ற நிலைவரம் பிரிட்டிஷ் பொருளாதாரத்தை பாதித்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்துடன்  உடன்பாடு இல்லாத ஒரு பிரெக்சிட் பிரிட்டனை பொருளாதார மந்தநிலைக்குள் தள்ளிவிடக்கூடும். பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சி ஸ்தம்பிதமடைந்திருக்கிறது என்று லண்டனை தளமாகக்கொண்டியங்கும் ஒரு பொருளாதாரம் மற்றும் நிதி விவகாரங்கள் தொடர்பிலான கருத்துருவாக்க நிறுவனமான ' பொருளாதார மற்றும் சமூக ஆராய்ச்சிக்கான மன்றம் செவ்வாய்கிழமை கூறியிருக்கிறது.உடன்பாடு எதுவும் இல்லாத பிரெக்சிட் தவிர்க்கப்படுமானால், 2019 இலும் 2020 இலும் பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவீதத்துக்கும் சற்று கூடுதலானதாக இருக்கும் என்று அந்த மன்றம் எதிர்பார்க்கிறது.

பேச்சுவார்த்தை மேசையில் மறுதரப்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் ஜோன்சனின் வெற்றியை வாழ்த்தியிருக்கிறார்கள், ஆனால் பிரெக்சிட் தொடர்பில் கடும் நிலைப்பாட்டையே தொடர்ந்தும் கடைப்பிடிக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்சிட் பேச்சுவார்த்தையாளரான மிச்சேல் பார்னியர், " ஜோன்சன் பதவியேற்றதும் அவருடன் ஆக்கபூர்வமான முறையில் பணியாற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக" ருவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

அதேவேளை ஈரான் பிரச்சினையில் பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் வேறுபாடுகள்தோன்றியிருக்கின்றன. ஈரானுடனான விவகாரங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை முனனர் முக்கியமான பாத்திரத்தை வகித்த பிரிட்டன் இப்போது அதன் எண்ணெய்க்கப்பல் ஒன்றை ஈரான் கைப்பற்றிய காரணத்தால் அமெரிக்காவின் நிலைப்பாட்டை நோக்கிச் சாய்கின்றது.

பிரிட்டனும் ஏனைய ஐரோப்பிய பொருளாதாரங்களும் வலிமையான முறையில் ஒன்றில் ஒன்று தங்கியிருக்கின்றன.பிரெக்சிட் என்பது முட்டைப்பொரியலில் இருந்து முட்டையை எடுப்பது போன்றதாகும் என்று உலக வர்த்தக நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமான பாஸ்கால் லாமி எச்சரிக்கை செய்திருக்கிறார்.

இறுதியில் இந்த பணியை நிறைவேற்றுவதற்கு ஜோன்சன் பல சவால்களைக் கடந்துசெல்லவேண்டியிருக்கும்.ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பில் அவர் அளித்திருக்கும் உறுதிமொழியை, -- உடன்பாட்டுடனோ அல்லது உடன்பாடு இல்லாமலோ -- நிறைவேற்ற முடியுமா, இல்லையா என்பது இன்னமும் எவருக்கும் தெரியவில்லை. அண்மைய எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய நிகழ்வுப்போக்குகளிலேயே அது தங்கியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் உலக சுற்றுலா தினநிகழ்வுகள் 

2023-09-26 17:30:26
news-image

எதிர்கால இயற்கை பாதுகாப்பை சிதைக்கும் அபிவிருத்தி...

2023-09-26 15:00:53
news-image

இத்தாலியின் வெளியேற்றத்தால் தகர்ந்து போகும் சீனாவின்...

2023-09-26 11:09:20
news-image

இணையத்தை வேகமெடுக்க வைக்கும் எலனின் திட்டத்திற்காக...

2023-09-25 21:57:42
news-image

நீதிக்கான மன்றாட்டமும்  வாயால் வடை சுடுதலும்

2023-09-25 12:30:48
news-image

மேற்கு ஆபிரிக்காவில் சூழும் போர் மேகம்...

2023-09-25 11:43:22
news-image

பசும்பால் விற்க இடையூறு : மதுபானசாலைகளுக்கு...

2023-09-25 11:02:40
news-image

மறுக்க முடி­யாத உரிமை

2023-09-24 19:45:52
news-image

ஜனா­தி­ப­தியின் அதிகப் பிர­சங்­கித்­தனம்

2023-09-24 19:46:10
news-image

தனி வழி செல்­வ­தற்கு கள­ம­மைக்கும் பஷில்

2023-09-24 19:46:51
news-image

பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒத்துழைப்பை வலியுறுத்தும் ஆசிய...

2023-09-24 19:47:49
news-image

ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களின் பண ...

2023-09-24 19:48:27