மட்டக்களப்பு பல்லைக்கழக வாளாகம் தொடர்பான சர்ச்சையையடுத்து தனியார் பல்கலைக்கழகங்களை ஒழுங்குப்படுத்துவதற்காக பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க 1978 ஆம் ஆண்டு பல்கலைக்கழக திருத்த சட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

இந்தச் சட்டத்தின் முன்மொழியப்பட்ட திருத்தத்தின்படி, ஒவ்வொரு பட்டப்படிப்பு வழங்கும் பல்கலைக்கழகங்கள் இனம், மதம், பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாது தகுதியை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும். 

மேலும், ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் அதன் வருடாந்த கணக்குகளையும், பெறப்பட்ட அனைத்து நன்கொடைகளையும் அறிக்கையிட்டு வெளிப்படுத்த வேண்டும். 

இந் நிலையில் மட்டக்களப்பு பல்கலைக்கழக வளாகம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை சவுதி அரேபியாவிலுள்ள சட்டவிரோத அமைப்பொன்றிடமிருந்து பெறப்பட்டமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.