குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் ஷாபிக்கு எதிராக குருநாகல் நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியரான சியாப்தின் மொஹமட் ஷாபி, வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை மற்றும் சட்டவிரோத கருத்தடை விவகார குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுசெய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றார்.

இந்நிலையில் குறித்த வைத்தியர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று குருநாகல் நீதிமன்றில் இடம்பெறவுள்ள நிலையில் அந்தப் பகுதியில் மக்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.