பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 60ஆவது படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி சென்னையில் ஆரமபமானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக 3 நாயகிகள நடிப்பதாக முன்பு கூறப்பட்ட நிலையில், பின்னர் நடந்த பூஜையில் கீர்த்தி சுரேஷ் மட்டுமே கலந்து கொண்டார். அதனால் ஒரே நாயகிதான் என்று கருதப்பட்டது.

ஆனால், இப்போது இன்னொரு நாயகியும் படத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில், மலையாள நடிகை அபர்ணா வினோத் என்பவர் ஒப்பந்தமாகி யிருக்கிறாராம். சமீபத்தில் சென்னை சாலிகிராமத்திலுள்ள அப்படத்தின் அலுவலகத்துக்கு வந்த அவரை பல கோணங்களில் போட்டோ எடுத்து

விட்டு கேரளத்துக்கு திருப்பி விட்டுள்ளனர்.

அந்த வகையில், அபர்ணா, விஜய்க்கு ஜோடியா அல்லது வேறு கெரக்டரில் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை. ஆனால் அவரும் விஜய் படத்தில் நடிப்பதாக சொல்கிறார்கள். இவர் மலையாளத்தில் 'நிஜன் நின்னோடு கூடையுண்டு' என்ற படத்தில் நடித்துள்ளாராம்.

மலையாள இயக்குநரான பரதன் இயக்கும் விஜய் படத்தில் ஏற்கனவே ஒரு மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் இருக்க, இப்போது இன்னொரு மலையாள நடிகை அபர்ணா வினோத்தும் இணைந்திருக்கிறார்.