கன்­னியா வெந்­நீ­ரூற்று விவ­காரம்: பொலிஸாரே தவ­றி­ழைத்­தி­ருந்தாலும் கண்டிப்பாக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்

Published By: J.G.Stephan

25 Jul, 2019 | 10:05 AM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

கன்­னியா வெந்­நீ­ரூற்று பகு­தியில் பொலி­ஸா­ரினால் தவறு ஏற்­பட்­டி­ருந்தால் அது­தொ­டர்பில் ஜனா­தி­ப­திக்கு தெரி­யப்­ப­டுத்தி   சம்­பந்­த­மான அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்போம்.  அத்­துடன் பிர­பா­கரன் மேற்­கொண்ட அழி­வு­களை இந்த பிரச்­சி­னை­யுடன் சமம்­ப­டுத்த முடி­யாது என எதிர்க்­கட்­சி­களின்  பிர­த­ம­கொ­றடா மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற கம்­பெ­னிகள் திருத்தச் சட்­ட­மூல மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

கன்­னியா வெந்­நீ­ரூற்று பகு­தியில் இடம்­பெற்­ற­தாக தெரி­விக்­கப்­படும் சம்­ப­வத்தில் பொலி­ஸா­ரினால் யாருக்­கா­வது அநீதி ஏற்­பட்­டி­ருந்தால் அது­தொ­டர்பில் விசா­ரணை நடத்த நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு பொலி­ஸுக்கு பொறுப்­பான அமைச்சர் என்­ற­வ­கையில் ஜனா­தி­ப­திக்கு இது­தொ­டர்பில் அறி­வு­றுத்­துவேன்.

 அர­சியல் வாதிகள் இதில் தலை­யிட்­ட­தா­லேயே இந்த பிரச்­சினை உக்­கி­ர­ம­டைந்­தது. குறிப்­பாக தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு இதில் தலை­யிட்­டது பொருத்­த­மில்லை. ஒரு­பக்க சார்­பாக செயற்­பட்­ட­தால்தான் மற்ற தரப்பு சந்­தே­கப்­பட்டு பிரச்­சினை ஏற்­பட்­டது என்றார்.  

இதன்­போது ஒழுங்கு பிரச்­சினை ஒன்றை எழுப்­பிய சாள்ஸ் நிர்­ம­ல­நாதன் எம்.பி.தெரி­விக்­கையில், தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு யாரும் அதில் தலை­யி­ட­வில்லை. மாறாக பெளத்த துற­விகள் சிலரே அங்­கு­வந்து இல்­லாத பிரச்­சி­னையை நிலை­நாட்ட முயற்­சித்­தார்கள் என்றார்.

தொடர்ந்து மஹிந்த அம­ர­வீர தெரி­விக்­கையில், பொலி­ஸா­ரினால் தவறு ஏற்­பட்­டி­ருந்தால் அது­தொ­டர்பில் ஜனா­தி­ப­திக்கு தெரி­யப்­ப­டுத்தி அதற்கு சம்­பந்­த­மான அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்போம். அத்­துடன் பிர­பா­கரன் இருந்தால் இவ்­வா­றான விட­யங்கள் இருந்திருக்காது என சாள்ஸ். எம். பி. தெரிவித்திருந்தார். ஆனால் பிரபாகரன் இருந்த காலத்தில் இதனைவிட பாரிய விடயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. பிரபாகரன் செய்த அழிவுகளை இதற்கு சம்பந்தப்படுத்த முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51