இன்று சர்வதேச செஞ்சிலுவை தினம்.!

Published By: Robert

08 May, 2016 | 09:41 AM
image

பிரான்ஸ்க்கும் இத்தாலிக்கும் இடையில் உள்ள சொல்பரினா என்ற இடத்தில் நடந்த யுத்தத்தின் போது அந்த வழியாக போய்க் கொண்டிருந்த ஹென்றி டுனான்ற் அங்கு பாதிக்கப்பட்டு இரத்த வெளியேற்றத்தினால் உயிருக்காக போராடிக்கொண்டிருந்த போர் வீரர்களையும், பொதுமக்களையும் கண்டு, அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தான் சென்ற நோக்கத்தை கைவிட்டு தொண்டர்களையும், பொதுமக்களையும் இணைத்து அவர்களின் உயிரைக்காப்பாற்றுவதற்காக மருத்துவ உதவிகளையும், முதலுதவிகளையும் மேற்கொண்டு பல உயிர்களை காப்பாற்றினார். இந்த நிகழ்வு அவரது மனதில் இத்தகைய சூழ்நிலையில் ஓர் அமைப்பை உருவாக்கி உயிர்ப்பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என எண்ணினார். இந்த பாரிய தாக்கத்தினால் மனமுடைந்த ஹென்றி டுனான்ட் 1962இல் சொல்பரினா நினைவுகள் என்ற புத்தகத்தினை வெளியிட்டு, சர்வதேச ரீதியில் இத்தகைய ஓர் அமைப்பின் அவசியத்தை 1863இல் நான்கு பெரியார்களை இணைத்து சர்வதேச செஞ்சிலுவைக் குழுவை உருவாக்கினார்.

தொண்டர்களை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவில் இணைக்கப்பட வேண்டுமென்ற காரணத்தால் 1864இல் பல்வேறு சங்கங்களையும், ராஜதந்திரங்களையும் இணைத்து முதலாவது ஜெனீவா சாசனத்தை உருவாக்கினார். சர்வதேசத்தின் அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பாக இது உருவாகியது. செஞ்சிலுவைச் சங்க சின்னம் வெள்ளைப் பின்னணியில் சிவப்பு சிலுவையாக உருவாக்கப்பட்டது. ஹென்றி டுனான்ட்; பிறந்த நாட்டின் தேசியக் கொடியாகிய சிவப்பு பின்னணியைக் கொண்ட வெள்ளைச் சிலுவையை சின்னமாக அமைந்த சுவிஸ் நாட்டின் கொடியை மாற்றியமைத்து செஞ்சிலுவைச் சங்க கொடியை உருவாக்கினார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழு தனது செயற்பாட்டை யுத்த பிரதேசங்களிலும், இயற்கை அனர்த்தம் நடக்கும் பிரதேசங்களிலும், செயலாற்றி பெரும்பாலான நாடுகளில் செயற்பட்டு வருகின்றது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்க குழு ஆயுத மோதல்களினாலும், உள்நாட்டு கலவரங்களினாலும், பாதிக்கப்படும் மக்களுக்கு சர்வதேச நாடுகளினால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட நடுநிலைமையான மனிதநேய அமைப்பாகும். இது போரினால் அல்லது இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு சர்வதேச உரிமைச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் மனிதநேய அமைப்பாகும். இவ்வமைப்பு போரினால் பாதிக்கப்படும் மக்களுக்கு சர்வதேச உரிமைச்சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் ஓர் மனிதாபிமான அமைப்பாகும். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதுடன் போர் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட நியமங்களை வலியுறுத்தும் நிறுவனமாகும். இது மாறிவரும் யுத்த ஆயுதங்களின் பயன்பாட்டிற்கேற்ப தனது சட்டங்களையும், நியமங்களையும், சர்வதேச அங்கீகாரத்துடன் மாற்றி அமைத்துக் கொள்ளும். ஆயுத பயன்பாட்டில் ஏற்படும் மாற்றங்களினால் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கிய போதும், தனது சேவையை செவ்வனே மேற்கொண்டு வருகின்றது.

இக்குழுவினால் ஆரம்பத்தில் 15 நாடுகளில் தேசிய சங்கங்களை உருவாக்கியது. இன்று (2016) 192 நாடுகளில் தேசிய சங்கங்களை உருவாக்கி உள்ளதுடன் அந்தந்த நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார சேவை, மருத்துவ சேவை முதலுதவி சேவை, அனர்த்த நிவாரணம், பல்வேறுபட்ட மனிதாபிமான சேவைகளை அந்தந்த நாட்டின் அரசுடன் இணைந்து அரசுக்குத் துணையாக மக்களுக்குச் சேவையாற்றி வருகின்றது. அத்துடன் மனிதாபிமானம், பாராபட்சமின்மை, சுயாதீனம், ஒருமைப்பாடு, நடுநிலமை, தொண்டர் சேவை, சர்வதேசமயம் ஆகிய 07 கொள்கைகளினை அந்தந்த நாடுகளில் விரிவுபடுத்தி வலைப்பின்னல் அமைப்பை கொண்ட ஒரு மனிதாபிமான சேவைகளை மேற்கொண்டுவருகின்றது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்க சம்மேளனம்(International Federation of Red Cross and Red Crescent Societies) ) இது 192 தேசிய சங்கங்கள் இணைந்து உருவாக்கப்பட்ட சம்மேளனமாகும். இது இன மத வேறுபாடின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும், நிவாரணப்பணி செய்து வருகின்றது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக்குழு யுத்த காலங்களில் யுத்தம் நடைபெறும் நாடுகளில் அல்லது அனர்த்தம் நடைபெறும் நாடுகளில் செயல்பட்டு வரும் ஒரு அமைப்பாகும். ஆனால் சர்வதேச செஞ்சிலுவைச் சம்மேளனம் யுத்தம் முடிந்த பின்பு யுத்த அனர்த்தத்தினாலோ, அல்லது வேறு அனர்த்தத்தினாலோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் மீள் குடியேற்றம், புனர்வாழ்வு என்பன வழங்கி அவர்களுக்கு மீள்கட்டமைப்பை உருவாக்கும் ஒரு அமைப்பாகும். இது தனது அங்கத்துவ நாடுகளில் இருந்து வசதி குறைந்த அங்கத்துவ நாடுகளுக்கு பொருளாhதர உதவிகளைப்பெற்று அந்த நாடுகளில் மீள்கட்டமைப்பை உருவாக்கும். இலங்கையில் உதாரணமாக வடக்கு கிழக்கு மாகாணத்தில் இந்திய உதவியுடன் வீடுகளை அமைத்துக் கொடுத்தது போல் தனது செயற்பாட்டை செய்து வருகின்ற ஒரு நிறுவனமாகும்.

தேசிய சங்கங்கள் உருவாகிய போது 1936ம் ஆண்டு இலங்கையில், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் உருவாகியது. இச்சங்கம் ஏனைய தேசிய சங்கங்கள் போல் அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பதுடன் அனர்த்தம் ஏற்படும் போது அதை எதிர்கொள்வதற்கு அனர்த்த முகாமைத்துவப் பயிற்சி, முதலுதவிப்பயிற்சி, அடிப்படை சுகாதார சேவை, இரத்ததானம், நடமாடும் மருத்துவ சிகிச்சை, நோய்களுக்கு விழிப்புணர்வு, (எயிட்ஸ், டெங்கு) பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டங்கள், வைத்தியசாலைப்புனரமைப்பு, மீளக்குடியமர்ந்த மக்களுக்கு நிவாரண உதவிகள், என்பனவற்றை செய்து வருகின்றது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் யாழ்.கிளைஇலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ்.கிளையாக இது இயங்கி வருகின்றது. இது யுத்த காலங்களில் பல்வேறுபட்ட பணிகளைச் செய்த இச்சங்கம் ஊரடங்கு நேரங்களில் 24 மணித்தியாலங்கள் அம்புலன்ஸ் சேவையை செய்து மக்களுடன் இணைந்து சிறப்பாக சேவையை செய்து வந்தது. பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு நிவாரணங்கள், மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டன. வைத்தியசாலைகள் புனரமைத்து கொடுத்தல் என்பனவற்றையும் செய்து வந்தது. யுத்தத்தின் பின்னர் மீள் குடியேறிய மக்களுக்கு வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டு வருகின்றது. உதாரணம் :- (இந்திய வீட்டுத்திட்டம்)

இயற்கை மற்றும் மனித செயற்கை அழிவுகளால் பாதிப்புறுவோரின் நலன்களை மனிதாபிமான அடிப்படையில் சாதி, சமய, வர்க்க பால் இன மொழிபாகுபாடின்றி, 07 கொள்கைகளுக்கு அமைவாக செயற்படுவதே செஞ்சிலுவைச் சங்கங்களின் குறிக்கோளாகும். செஞ்சிலுவைச் சங்கங்களின் பலம் அதன் மிகப் பரந்த தொண்டர் சக்தியாகும்.

இதுவரை இச்சங்கம் ICRCவெளிநாட்டு தேசிய சங்கங்கள், ICRC போன்றவற்றின் உதவியுடன் செயல்பட்டன. (ICRC) கொழும்பு மட்டும் செயற்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவைகளை நமது நாட்டிற்கு செய்து வருகின்றது.) ஆனால் ஏனைய அந்நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டன. எனவே அந்நிறுவனத்தின் உதவிகள் தற்போது கிடைப்பதில்லை. எனவே 2013 – 2015 காலகட்டத்துக்கான மீள் கட்டமைப்பு (BEYOND RE – ENGINEERING) என்ற கொள்கையை வகுத்து ஒவ்வொரு மாவட்ட கிளைக்கும் தானாகவே கிடைக்கக்கூடிய பொருளாதார பலத்தையும், ஏனைய தொழில்நுட்ப வளத்தையும், மனித வளத்தையும் கொண்டதாக அமைப்பதற்கு சொந்தமான ஓர் வருமானத்தை உருவாக்கப்படல் வேண்டும் என்ற புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13