யாழ். நிதி நிறுவனத்தில் மோசடி ; பெண் உத்தியோகத்தர் விசாரணைகளில் தலையீடு செய்வதாக எப்.சி.ஐ.டி குற்றச்சாட்டு

Published By: Digital Desk 4

24 Jul, 2019 | 10:34 PM
image

“யாழ்ப்பாணத்தில் இயங்கும் நிதி நிறுவனம் ஒன்றால் தனிநபர் ஒருவருக்கு சுமார் 11 கோடி ரூபா முற்பணம் வழங்கி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வழக்கில் மூன்றாவது சந்தேக நபரும் அந்த நிறுவனத்தின் உத்தியோகத்தரான பெண் விசாரணைகளில் தலையீடு செய்கின்றார். 

அத்துடன், அவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் அவரது கணக்கிலிருந்த பல மில்லியன் ரூபா பணம் உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன” இவ்வாறு வழக்கு விசாரணைகளை முன்னெடுக்கும் பெரும் நிதி மோசடிகள் விசாரணைப் பிரிவினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

மூன்றாவது சந்தேகநபர் விசாரணைகளில் தலையீடு செய்தால் அவருக்கு வழங்கப்பட்ட பிணை நிராகரிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்று எச்சரித்த மன்று, முதலாவது சந்தேகநபரான நிதி நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளை முகாமையாளர் மற்றும் 5ஆவது சந்தேகநபரான வர்த்தகருக்கும் இந்த மோசடியுடன் நேரடித் தொடர்பு உள்ளது என்று சுட்டிக்காட்டியது. 

இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

நிதி நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளை முகாமையாளர், உத்தியோகத்தர் மற்றும் பணத்தைப் பெற்றுக்கொண்ட வர்த்தகர் ஆகிய மூவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அத்துடன், மூன்றாம் நான்காம் சந்தேகநபர்களான பெண் உத்தியோகத்தர்கள் இருவரும் மன்றில் முன்னிலையாகினர்.

நிதி நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளை முகாமையாளர், உத்தியோகத்தர் மற்றும் பணத்தைப் பெற்றுக்கொண்ட வர்த்தகர் ஆகிய மூவர் சார்பில் முறையே சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன், வீரகத்திப்பிள்ளை கௌதமன், ந.ஸ்ரீறிகாந்தா ஆகியோர் பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்து நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தனர்.

எனினும் இந்த மோசடி தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதனாலும் மேலும் பலர் கைது செய்யப்படவேண்டி உள்ளதாலும் சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்க பெரும் நிதி மோசடிகள் விசாரணைப் பிரிவு பொலிஸார் ஆட்சேபனை தெரிவித்தனர்.

அதனால் சந்தேகநபர்களின் பிணை விண்ணப்பத்தை நிராகரித்த நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல், அவர்கள் மூவரினதும் விளக்கமறியலையும் 14 நாட்களுக்கு நீடித்து உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08