2016ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் 153 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுடைய 27மீன்பிடி வள்ளங்களும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்ற௧யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய வீரகேசரி வாரவெளியீட்டுக்கு நேற்றுத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் 153 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களுடைய 27மீன்பிடி வள்ளங்களும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்களில் 119 மீனவர்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய 34 மீனவர்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். எனினும் அவர்கள் பயன்படுத்திய மீன்பிடி வள்ளங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் இதுவரையில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்தமைக்காக

115 மீன்பிடி வள்ளங்கள் இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

இதேவேளை, கடந்த ஐந்து ஆண்டுகளில் மாத்திரம் இந்திய கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 1,205 இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.