வடமராட்சி, வல்வெட்டித்துறையில் 30 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே கஞ்சா கைப்பற்றப்பட்டது. அதனை விற்பனை செய்யும் நோக்கில் உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் 55 வயதுடைய திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இராணுவத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், வல்வெட்டித்துறை பொலிஸார் இன்று (24) காலை சந்தேகநபரைக் கைதுசெய்தனர்.

சந்தேகநபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், பருத்தித்துறை நீதிமன்றில் அவரை முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.