(ஆர்.யசி )

ஈஸ்டர் தின தாக்குதலுக்கும் ஐ.எஸ் அமைப்பினருக்கும் தொடர்புகள் இருப்பதாக இதுவரை எந்த ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன பாராளுமன்ற சாட்சியமளித்தார். 

அத்துடன் ஈஸ்டர் தின தாக்குதல் நடத்திய சஹரான் மற்றும் அவரது குழுவினர் அவர்களாகவே ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்புகொண்டு தாக்குதலை பொறுப்பேற்க கூறியதாக தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் சர்வதேச ஒத்துழைப்புகள் இருப்பதாக இன்னமும் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று கூடியது. இதில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட போதே அவர் இவற்றை முன்வைத்தார்.

(விசாரணையின் முழு விபரம் நாளைய வீரகேசரியில்)