மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 9 வயது சிறுவன் ஒருவனுக்கு குருதி மாற்றியேற்றியதில் ஏற்பட்ட மரணம் தொடர்பான வழக்குடன் சம்பந்தப்பட்ட வைத்தியர்கள், உட்பட சந்தேகநபர்களை எதிர்வரும் 7 ம் திகதி ஆஜர்படுத்துமாறும் அதற்கான ஆவணங்களை சமர்பிக்குமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த உத்தரவை செயற்படுத்தாவிட்டால் இதனை சி.ஐ.டி யினரிடம் ஒப்படைக்கப்படும் என பொலிசாருக்கு எச்சரித்தார்
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த 9 வயதனா ஜெயக்காந்தன் விதுலஷ்சன் கடந்த 1.3.2019 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தின் போது சிறிய காயங்களுடன் செங்கலடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதால் 19 ம் திகதி உயிரிழந்தார்
இதனையடுத்து உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதால் தனது மகன் உயிரிழந்தாக முறைப்பாடு செய்திருந்தார்.
இதனை தொடர்ந்து கடந்த யூலை மாதம் 08 திகதி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு எடுக்கப்பட்ட போது சந்தேக நபர்களை 22 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் இரு தாதியர்களை ஆஜர்படுத்திய போது நீதவான் அவர்களை நீதிமன்ற பிணையில் விடுவித்து ஏனைய சந்தேக நபர்களை இன்றைய தினம் 24 ஆம் திகதி ஆஜர் படுத்துமாறு நீதவான் எம்.சி.ஏ.றிஸ்வான் உத்தரவிட்டிருந்தார்.
அதனடிப்படையில் பொலிசார் இன்றைய தினம் 3 வைத்தியர்கள் உட்பட 6 பேரை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட இருந்தபோதும் வைத்தியர்களை கைது செய்வது என்றால் சட்டமா அதிபரிடம் அனுமதி பெறப்பட்டு கைது செய்யமுடியும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் அவர்களை பொலிசார் கைது செய்யாது திருப்பி அனுப்பியுள்ளனர்.
பின்னர் நீதிமன்றில் வழக்கு எடுத்துக் கொண்ட போது சந்தேக நபர்களை நீதிமன்றில் 2010 ம் ஆண்டு சட்டத்தில் வைத்தியர்களை கைது செய்யமுடியாது என பொலிசார் நீதிமன்றல் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து நீதவான் 2011 ம் ஆண்டு வெளியிட்ட சட்டத்தில் வைத்தியர்களை கைது செய்யமுடியும் என குறிப்பிட்டு எதிர்வரும் 7 ம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்து அன்றைய தினம் சந்தேக நபர்களை நீதி மன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்
இந்த நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தாவிடின் இந்த வழக்கை சி.ஜ.டி யினரிடம் ஒப்படைக்கப்பட்டு சந்தேக நபர்களை கைது செய்யப்படும் என பொலிசாரை எச்சரித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயதுடைய ஜெயக்காந்தன் விதுலஷ்சன்; மீது சிகிச்சைக்காக இரத்தம் மாற்றி ஏற்றியதால் கடந்த ஜனவரி 19 திகதி உயிரிழந்திருந்தார்.
இதனையடுத்து பிரேத பரிசோதனை இடம்பெற்ற பின்னர் சட்டவைத்திய அதிகாரி இது இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதால் மரணித்துள்ளதாகவும் சில உடல் கூறுகள் பரிசோதனைக்கு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விபத்தால் மரணிக்கவில்லை எனவும் பொலிசாருக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.
இதனையடுத்து மட்டக்களப்பு நீதவான் நீதி மன்றில் வழக்குத் தொடரப்பட்டது. இதனையடுத்து ஜெயக்காந்தன் விதுலஷ்சனின் சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு இடப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணைகள் 3 தடவைகள் நடைபெற்றுள்ளதுடன், சம்பந்தப்பட்ட மரணத்துடன் தொடர்புடையவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இதேவேளை இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஏற்கனவே கருத்துத் தெரிவித்திருந்த மட்டு. போதனா வைத்தயசாலை பணிப்பாளர் திருமதி கே. கணேசலிங்கம், கடந்த ஜனவரி 19 திகதி போதனா வைத்திய சாலையில் உயிரிழந்த 9 வயதுடைய ஜெயக்காந்தன் விதுலஷ்சனின் சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியாக அதனுடன் தொடர்புடையவர்கள் அனைவருக்கும் முதலில் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளேன்.
அவர்களிடமிருந்து கோரப்பட்ட அந்த விளக்க கடிதம் கிடைத்தவுடன் விசாரணைக்குழு அமைத்து உடன் விசாரணை செய்யப்பட்டு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும். யாராக இருந்தாலும் பிழை இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்
அதனையடுத்து இதில் சம்மந்தப்பட்ட அவசர சிகிச்சைப்பிரிவின் பொறுப்பான வைத்தியர்கள் உட்பட தாதி உத்தியோகத்தர், வேறு பிரிவுகளுக்கு மாற்றப்பட்டிருந்தமை. குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM