முல்லைத்தீவு உதயம் நகர் வீட்டுத் திட்டங்கள் சஜித் பிரேமதாஸவால்  மக்களிடம் கையளிப்பு!

Published By: Daya

24 Jul, 2019 | 04:11 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைக்கப்பட்ட உதயம் நகர் மற்றும் ஆதவன் நகர் ஆகிய இரண்டு மாதிரி கிராமங்களில் அமைக்கப்பட்ட 50 வீடுகள் இன்று புதன் கிழமை மக்களிடம் கையளிக்கப்பட்டது.

வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில்  உதயம் நகர் மாதிரி கிராமத்திற்குள் 25 வீடுகளும் ஆதவன் நகர் மாதிரி கிராமத்தில் 25 வீடுகளுமாக மொத்தமாக ஐம்பது வீடுகள் அமைக்கப்பட்டு இருந்தது.

அந்த வகையிலே நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்க படுகின்ற மாதிரி கிராமங்கள் வரிசையிலே  223 ஆவது மற்றும் 224 மாதிரி கிராமங்களான உதயம் நகர் மற்றும் ஆதவன் நகர் கிராமங்களின் வீடுகளை மக்களிடம் இன்று வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ  மக்களிடம் கையளித்தார்.

அமைச்சர் சஜித் பிரேமதாச ஒவ்வொரு வீடுகளுக்கும் சுட்டெரிக்கும் வெயிலுக்கு  மத்தியில் நடந்து சென்று ஒவ்வொருவீடுகளாக நாடாவை வெட்டி மக்களுடைய வீடுகளை திறந்துவைத்து மக்களுடன் அன்பாக கலந்துரையாடினார்.

இன்று காலை 10.30  மணிக்கு இந்த வீடுகள் கையளிக்கும் நிகழ்வு ஆரம்பமாகி இடம்பெற்றதோடு பல்வேறு வாழ்வாதார திட்டங்கள் வீடமைப்பு கடன்கள் மூக்கு கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தேசிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன்  உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08