இலங்கிலாந்தின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியைச் ( பழைமைவாதக் கட்சி )சேர்ந்த போரிஸ் ஜோன்சன் நேற்றைய தினம் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர் இன்றைய தினம் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.

கட்சி உறுப்பினர்கள் மத்தியில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 92,153 வாக்குகளைப்பெற்று கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவராகவம் இங்கிலாந்தின் புதிய பிரதமராகவம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், புதிதாக தெரிவுசெய்யப்ட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போமானால்,

 • இங்கிலாந்தின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள போரிஸ் ஜோன்சன் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பிறந்தவர். 

 • அவர் இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படைப்பை நிறைவுசெய்துள்ளார்.  

 • ஜோன்சன் அரசியலுக்கள் காலடி எடுத்துவைத்த பின்னர், பாராளுமன்ற உறுப்பினராகவும், லண்டன் மாநகரின் மேயராகவும் பின் வெளியுறவுத்துறை செயலராகவும் இருந்துள்ள நிலையில், தற்போது  இங்கிலாந்தின் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

 • போரிஸ் ஜோன்சனுடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும் சர்ச்சைகள் கூடவே பயணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 • பிரிட்டனில் இருந்து வெளிவரும் “தி ஸ்பெக்டேட்டர்” என்ற வார இதழின் ஆசிரியராக போரிஸ் ஜோன்சன் பணியாற்றியுள்ளார். 

 • இவர் பத்திரிகைத் துறையில் கடமையாற்றியபோது உள்ளூர் அதிகாரிகளால் பாலுறவு ஆதரவு பிரசாரங்களை ஊக்குவிக்கும் சட்டத்துக்கு எதிரான கருத்துகளையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளார். 

 • அவர் கடமையாற்றிய வார இதழில் உண்மைக்குப் புறம்பான சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டதால் போரிஸ் ஜோன்சன் ஆசிரிய பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

 • போரிஸ் ஜோன்சன் குழப்பவாதியாகவும் அல்லது ஒழுங்கற்றவராகவும் பிரபலமாக அறியப்படுகிறார்.

 • அரசியலில் நுழைந்தவுடன், பொதுமக்களின் அந்தரங்க விஷயங்களில் அரசு தலையிடகூடாது என்று தன் நிலைப்பாட்டை மாற்றினார்.

 • கடந்த 2001 ஆம் ஆண்டில் ஹென்லி-ஒன்-தேம்ஸ் என்ற பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட போரிஸ் ஜோன்சன் முதல்முறையாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

 • போரிஸ் ஜோன்சன் கடந்த 2001 ஆம் ஆண்டிலிருந்து 2008 வரை 7 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

 • கடந்த 2008 ஆம் ஆண்டில் லண்டன் மேயர் தேர்தலில் போரிஸ் ஜான்சன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

 • 2008 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரை 8 ஆண்டுகள் லண்டன் மேயராக பதவி வகித்தார். 

 • பின்னர் நான்கு ஆண்டுகள் யூக்ஸ்பிரிட்ஜ் மற்றும் தென் ரூய்லிப்பின் பாராளுமன்ற உறுப்பினராக  நான்கு ஆண்டுகள் இருந்துள்ளார். 

 • பிரதமராவதற்கு முன், இரண்டாண்டுகள் 2016 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆண்டு வரை வெளியுறவுத்துறை செயலராக பதவி வகித்தார்.

 • இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நெருங்கிய நண்பராக அறியப்படும் போரிஸ், 2017 ஆம் ஆண்டு டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் நியூயோர் சென்ற போரிஸ், டிரம்பின் முக்கிய ஆலோசகர்களை சந்தித்துள்ளார். 

 • ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா என்பது குறித்து இடம்பெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில்,  ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன்  வெளியேறவேண்டும் என்று வலியுறுத்தி போரிஸ் ஜோன்சன் பிரசாரம் செய்திருந்தார்.