உலகக் கிண்ணத் தொடரின் இறுதி ஆட்டம் எனது வாழ்நாளில் ஏற்பட்ட மிக மோசமான அனுபவம் என நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மார்டின் குப்டில் தெரிவித்துள்ளார்.

ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரின் இறுதி ஆட்டத்தில் சூப்பர் ஓவரும் சமனில் முடிந்த நிலையில், அதிக பவுண்டரிகள் அடித்ததால், இங்கிலாந்து வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

இது நியூஸிலாந்து அணி வீரர்களுக்கு பெரும் மனவேதனையை ஏற்படுத்தியது. சூப்பர் ஓவரில் குப்டில் ரன் அவுட்டானார்.

இந்நிலையில் இது பற்றி தெரிவித்த அவர், 

இறுதி ஆட்டம் நடந்து முடிந்ததை நம்ப முடியவில்லை. எனது கிரிக்கெட் வாழ்வில் ஏற்பட்ட சிறந்த மோசமான நாள் இதுவாகும். எனினும் நியூஸிலாந்து அணியில் இடம் பெற்று ஆடியதை, பெரிய கெளரவமாக கருதுகிறேன். தொடர்ந்து ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி என்றார்.