இலங்கையில் கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ள கொள்கலன்கள் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
பிரிட்டனின் சூழல் உணவு மற்றும் கிராமிய விவகாரங்களிற்கான திணைக்களமான டெவ்ரா இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறிப்பிட்ட கொள்கலன்களிற்குள் உடலுறுப்புகளும் மனித பாகங்களும் காணப்படுகின்றன என்ற தகவல் குறித்து விசாரணை செய்வதாக தெரிவித்துள்ள டெவ்ரா எனினும் இலங்கை அதிகாரிகள் தங்களை இது தொடர்பாக தொடர்புகொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளது.
கழிவுப்பொருட்கள் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வதை தடுப்பது குறித்து நாங்கள் உறுதியாகவுள்ளோம் என தெரிவித்துள்ள பிரிட்டனின் சூழல் உணவு மற்றும் கிராமிய விவகாரங்களிற்கான திணைக்களத்தின் பேச்சாளர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் தனிநபர்கள் இரண்டுவருட சிறைத்தண்டனையை எதிர்கொள்ளவேண்டிவரலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அதிகாரிகளிடமிருந்து எங்களிற்கு அழைப்பு எதுவும் வரவில்லை ஆனால் நாங்கள் நேரடியாக தொடர்புகொண்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட கொள்கலன்களில் பிரிட்டனை சேர்ந்த மனித எச்சங்கள் காணப்படுவது உறுதிசெய்யப்பட்டால் பிரிட்டனின் என்எச் எஸ் மருத்துமனைகளின் கழிவுகளாக அவையிருக்கலாம் என தெரிவித்துள்ள டெலிகிராவ் குறிப்பிட்ட மருத்துவமனைகளே உடற்கூறியல் கழிவுகளை வெளியேற்றமுடியாமல் திணறுகின்றன என குறிப்பிட்டுள்ளது.
மெத்தைகள் என்ற போர்வையில் பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கழிவுகள் மிகவும் ஆபத்தானவை என இலங்கையின் மத்திய சூழல் அதிகார சபை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM