(செ.தேன்மொழி)

கல்கிசை பகுதியில் உள்நாட்டு துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிசை பகுதியில் நேற்று பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன் போது கைது செய்யப்பட்ட 44 வயதுடைய சந்தேக நபரிடமிருந்து அடையாளம் காணப்படாத புதியவகை உள்நாட்டு துப்பாக்கியொன்றும் ,ரவைகள் நான்கும் மீட்கப்பட்டன.

சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.